December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

“18000த்துக்கு அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?” வந்தான் – பெரியவர் வடிவில்!

13781883 1222525647792598 7844909258154374602 n - 2025

“*18000த்துக்கு* அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?” வந்தான் – பெரியவர்
வடிவில்!


(ஒன்று வைகுண்டபதியின் வரிவடிவத் தோற்றம்! இன்னொன்று அவனுடைய மானுட
ஞானத்தோற்றம்!)

(சர்மாஜிக்கு கிடைத்த பாக்கியம்.)

சொன்னவர்;* இந்திரா சௌந்தரராஜன்*

*நன்றி-பால ஹனுமான்.*

*17-07-2014 போஸ்ட்-மறுபதிவு.**பன்னிரெண்டு கோடி முறை ராம நாமம்
ஜெபித்தவருக்கு ஹனுமனின் தரிசனம் வாய்க்குமாம். பதினெட்டு கோடி முறை
ஜெபித்தவருக்கு ராம தரிசனம் சித்தியாகுமாம்.* இது அனுமானமாய் சொல்லப்படுவதல்ல…
நடந்திருக்கிறது. ராம தரிசனமும், ஹனும தரிசனமும் வாய்க்கப் பெற்றவர்கள்
இருந்திருக்கிறார்கள்.

என்றால், இந்த *18000த்துக்கு* அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…? வந்தான் –
பெரியவர் வடிவில்!

சர்மாஜி பதினெட்டாயிரத்தை நெருங்கிய சமயம், பெரியவர் சென்னையில் வந்து
முகாமிட்டிருந்தார். சர்மாஜியும் அவரை சந்தித்து, தனது பாரத வாசிப்பையும்,
சஹஸ்ரநாமம் *18000த்தை* தொட இருப்பதையும் கூறினார்
.
பெரியவர் பூரித்துப்போனார். அந்த *பதினெட்டாயிரக் கணக்கு*, இங்கே என்
எதிரிலேயே பூர்த்தியாகலாமா என்று கேட்டார். சர்மாஜிக்கும் பழம் நழுவி பாலில்
விழுந்தது போலானது. அன்பர்களோடு கூடி, அங்கேயே பாராயணம் செய்து பூர்த்தி
செய்தார். பெரியவரும் அன்றைய நிகழ்வில் பூர்ண கும்ப கலசத்தை, தன் கரம் தொட்டு
ஆசீர்வதித்து தரவும் அது வினியோகமாயிற்று.

பாராயணம் புரிந்தவர்களுக்கு மடத்திலேயே பிரசாத போஜனம். சொல்லி வைத்த மாதிரி
ஆனந்தம் ஆனந்தம் என்று வானமும் குதூகலித்தது. நனைந்து கொண்டுதான் போனார்கள்.

சர்மாஜியும் வீட்டை அடைந்தார்.

அதுவரை நடந்த பாராயணங்கள் எல்லாம் ஒரு லக்ஷ்மி நாராயணர் படத்தின் முன்தான்
நடந்தது. நிறைவு பெரியவர் முன் நிகழ்ந்துவிட்டிருந்தது. அந்த நினைவுகளோடு
அந்தப் படத்தை பார்த்து வணங்கினார்.

உள்ளே ஒரு சிறு நெருடல்.

இறுதிப் பாராயணத்தில் இந்த படம் இருந்திருக்கலாமோ? இவர் இடத்தில் பெரியவரே
இருந்துவிட்டார். இருந்தாலும் சற்று நிரடியது. அந்த உச்சக்கட்டமும் இனிதான்
வேலை செய்தது. மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து சர்மாஜியிடம், பெரியவர்
உங்காத்துக்கு வரப் போறதா தகவல் சொல்லிவிட்டார்” என்றார்.

சர்மாஜி பாதாதி கேசம் சிலிர்த்துப் போனார். ‘என் வீட்டுக்கா… அவர் பாதம் இங்கே
படப்போகிறதா? நான் அவ்வளவு புண்ணியசாலியா?’ – அவருக்குள் கேள்விகள் ஓடத்
தொடங்கிவிட்டன.

சர்மாஜி வீடு மைலாப்பூரில்… வழியில் நாகேஸ்வரராவ் பூங்கா, லஸ் கார்னர்,
கற்பகாம்பாள் நகர், விவேகானந்தர் கல்லூரி தெரு வழியாகத்தான் வந்தாக வேண்டும்.
விஷயம் பரவி ஜனங்களும் அவரை தரிசனம் செய்யத் தயாராகிவிட் டனர்.

சர்மாஜி என்ன செய்தார் தெரியுமா?

அந்த லட்சுமி நாராயணர் படத்தை வீட்டு வாசலில் ஒரு மேஜை போட்டு, அதன்மேல்
வைத்து மாலை போட்டு ஒரு விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டார்.

அதேசமயம், பெரியவரின் இந்த வருகை தெரிந்து, நாத்திக வாதிகளும் தங்கள்
எதிர்ப்புணர்வை காட்டும் விதமாய், கறுப்புச் கொடி மற்றும் தங்கள் வாதங்களுடன்
நிற்பதாக தகவல்.

பெரியவரும் புறப்பட்டுவிட்டார்.

இந்த நாத்திகவாதிகள் பார்வையில் படாமல், அவரை அழைத்துச் செல்ல முயன்றவர்களை
தவிர்த்தவர், ‘ஒளிபவனா துறவி? – இம்மாதிரி இடங்களில் ஒளிர்பவனல்லவா துறவி!’
என்பது போலவும், ‘வாழ்த்தும் வசவும் எனக்கு சமமானதே’ என்பதை உணர்த்துவது
போலவும், அதேவழியில் அவைகளை ஏற்றுக் கொண்டபடியே, சர்மாஜி வீட்டு வாசலுக்கும்
வந்து சேர்ந்தார்.

காத்திருந்தது அந்த லக்ஷ்மிநாராயணர் உருவப்படம்!

அதை நோக்கி நின்றார் பெரியவரும். சர்மாஜியின் உறுத்தலுக்கு விடைபோன்ற அந்த
வேளையில்… வாசலில் லக்ஷ்மி நாராயணர் படத்தை வைத்துக்கொண்டு சர்மாஜி
காத்திருக்க, பெரியவரும் வந்து சேர்ந்தார். உடனே சர்மாஜி பெரியவரை உபசரிக்கத்
தொடங்கினார். படத்துக்கு பக்கத்திலேயே ஒரு பலகை போடப்பட அதில் பெரியவரும் ஏறி
அமர்ந்தார்.

ஒன்று வைகுண்டபதியின் வரிவடிவத் தோற்றம்! இன்னொன்று அவனுடைய மானுட
ஞானத்தோற்றம்!

சர்மாஜியும் தம் குடும்பத்தோடு பெரியவரையும் படத்தையும் சுற்றிவந்து கீழே
விழுந்து வணங்கிச் சேவித்தார்.

நான்கு ஆண்டுகாலம் அவர் செய்த உபன்யாசத் தவத்துக்கு வரமானது வீட்டு வாசல் தேடி
வந்துவிட்டது. பெரியவரும் சுற்றி நிற்பவர்களை எல்லாம் விலகச் சொல்லிவிட்டு
சர்மாஜியின் வீட்டை ஒரு பார்வை பார்த்தார்.

எளிமையான ஓட்டுக்கூரை வீடு!

இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டுதான் இதை நீ சாதித்தாயா?” என்று கேட்டு
ஆசீர்வதித்தார்.

அதன்பின் வெகு சீக்கிரத்தில் அந்த வீடு, தன் முதுமைக்குரிய பலவீனங்களைப்
போக்கிக் கொண்டு பலமானதாக மாறி, அதன்பின் பல நல்ல காரியங்களும் அந்த வீட்டில்
அடுத்தடுத்து நடந்தன.

அதுமட்டுமல்ல; பத்ரிநாத், கேதார்நாத் என்று சர்மாஜி யாத்திரை சென்று வரவும்
வாய்ப்பு உருவாகியது. பெரியவரே ஒரு ஸ்படிக மாலையை அணிவித்து அனுப்பி வைத்தார்.

மொத்தத்தில் சர்மாஜியின் கடைத் தேற்றத்துக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம்
நிகழத் தொடங்கியது.

அவ்வளவுக்கும் ஒரு ஆரம்பம்தான் காரணம்.

ஊரும் உலகும் வாழ்ந்திட, பாரதம் படிப்பது என்கிற அந்த சுயநலமில்லாத ஆரம்பம்,
படிப்படியாக சர்மாஜியை அவர் குடும்பத்தையே சுத்திகரித்து நமக்கும் ஒரு நல்ல
உதாரணமாக மாறிவிட்டது.

பதினெட்டு புராணங்கள் ஒரு சேட்ஜி வாழ்வில் மறுமலர்ச்சி புரிந்தது என்றால்,
மகாபாரதம் சர்மாஜி வாழ்வில் அவரை தெய்விக அனுபவங்களுக்கு ஆட்படுத்தி
ஞானியாக்கியது. பின்னாலே, கண்களைத் திறந்துவிட்ட ஒரு குருநாதராய் நம் பெரியவர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories