December 6, 2025, 10:44 PM
25.6 C
Chennai

“அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை”

“அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை”

(மூளையின் ஸாமர்த்தியத்துடன் இதயத்தின் ஒட்டுதலையும் ஒட்டிய இந்த ‘யுனீக்’ ஸாமர்த்தியத்தை என் சொல்ல?)

கட்டுரையாளர்-ரா-கணபதி. 32089307 1333862976714356 805196451196960768 n - 2025
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு நீண்ட கட்டுரையில் 2ம் பகுதி

ஒரு பெரிய விமான விபத்து.’ஸேஃப் லாண்டிங்’க்கு வாய்ப்பேயில்லை என்ற ஆபத்து நிலையில், நீலம் ராஜூவின் மருமகனும் மகளும் பெரியவாளை தெய்வத்தின் அவதாரமாகவே வர்ணித்து சக பயணிகளுக்கும் தைரியமூட்டி பெரியவாளை வேண்டச் செய்து.’மிராகிள் ‘என்று அவர்கள் வியக்குமாறு விபத்து விலகச் செய்தனர்.(பெரியவாள் அருளால்

“தம்பதியோ (நீலம் ராஜு மகளும் மருமகனும்) உடனே இந்தியாவுக்குப் பறந்துவிட வேண்டும்;உயிர் காத்த மனித தெய்வத்துக்குப் பாத பூஜை செய்ய வேண்டும்; அப்புறந்தான் உணவருந்த வேண்டுமென்று பிரதிக்ஞை செய்து கொண்டனர்.”

.

அப்படித்தான் இப்போது ஸ்ரீ சரணரின் சரணார விந்தத்துக்குப் பாதபூஜை செய்யப் புஷ்பங்களும், ஸ்வர்ண புஷ்பங்களும் எடுத்துக் கொண்டு
வந்திருக்கின்றனர்.

பெரியவாளின் ரக்ஷக சக்தியும் ரக்ஷிக்கப்பட்டவர்களின் உத்தம பக்தியும் உடனிருந்தோரை உருக்கி விட்டது.

பெரியவாள் மிராகிளில் தமக்கு சம்பந்தமேயில்லாதது போல,ஆனால்மலர்ச்சியுடன் அவர்கள் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டார். பன்னீராகச் சிறிது நேரம்அவர்களிடம் பேசினார். பிறகு பாரிஷதர்களிடம் கூறித் தமது பாதுகைகளைத் தருவித்தார்.

தம்பதியின் பெண் குழந்தையை அருகழைத்தார். அதன் பெற்றோர் கொண்டு வந்திருந்த புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் யாவற்றையும் அதன் புஷ்பக் கையாலேயே எடுத்து எடுத்துப் பாதுகைக்கு அர்ச்சனையாகப் போடச் சொன்னார்.

குழந்தை ஆசை ஆசையாகப் பாத பூஜை செய்தது. பெற்றோர் ஆனந்தத்துடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

ஸ்ரீசரணர் அவர்களை நோக்கி, “நீங்கள் இருவரும் சேர்ந்து இந்தக் குழந்தை. இது பண்ணும் பூஜை நீங்களே செய்வதுதான்!அதோடு உங்கள் கையால் பண்ணுவதை விட இது குட்டிக்கையால் பண்ணும்போது நிறைய அர்ச்சனை, நிறைய நாழிநடக்கும்” என்று முகமெலாம் நகையாகத் தெலுங்குமொழியில் கூறினார்.

அவர்களது ஆனந்தம் அப்போது ஆராத ஆனந்தமாயிற்று!

பூஜை முடிந்தது.

ஸ்ரீசரணர் அவர்களை அழைத்துச் சென்று வயிறார போஜனம்செய்விக்குமாறு பாரிஷதர் சிலரிடம் பணித்தார்.

அவர்கள் சென்றபின் உடனிருந்தோரிடம் சொல்வார்;

“இந்தப் புண்ய பாரத தேசத்தில் பிறந்த ஒருவர் அந்நிய தேசம்போய் நம்முடைய ஆசாரங்களில்லாத ஜனங்களுடன் பழகி விட்டுத் திரும்பி வரும்போது அங்கே என்ன அநாசாரம் நடந்திருக்குமோ என்கிறதால் அவர்களை ரொம்பவும் சாஸ்த்ரோக்தமான கர்மாக்களில் அநுமதிப்பதில்லை.

அதனால் நீலம் ராஜுவுடைய பெண்-மாப்பிள்ளை பாத பூஜை செய்கிறதற்கில்லை, சாஸ்த்ரிகளை வைத்துக் கொண்டு ‘ஆசார்ய முகேன’ என்று அவரிடம் அவர்கள் புஷ்பம் முதலானதைக் கொடுத்து அவர் கையால் பூஜை பண்ணியிருக்கலாம்தான்! ஆனால் அவர்களுக்கிருந்த பக்தி தாபத்தில், நேரே தாங்கள் பூஜை பண்ணாமல் ஒருத்தர் கையில் கொடுத்துப் பண்ணுவது ரொம்பவும் மனஸுக்கு ஏற்காமலே இருக்கும். அதுவே தங்கள் குழந்தை தங்களுக்காகப் பண்ணுகிறது, அதோடு நான் சொல்லிப் பண்ணுகிறது என்கிறபோது தாங்களே பண்ணுவதை விடவும் அவர்களுக்கு ஸந்துஷ்டியாயிருக்கும்.

“கடல் கடந்த தோஷம் குழந்தைக்கும் தானே இருக்கிறது என்று தோன்றலாம்.அப்படியில்லை. அது புண்ய பாரத தேசத்திலிருந்துவேறே ஆசாரமுள்ள வெளியிடத்துக்குப் போகவில்லை. இந்தக்குழந்தை பிறந்ததே இங்க்லாண்டில்தான். அங்கே பிறந்த குழந்தை இந்தப் புண்ய தேசத்துக்கு வந்திருக்கிறது.அதோடு குழந்தைப் பிராயம் என்கிறதாலும் ஒரு பரிசுத்தி.

அதனால்தான் சாஸ்த்ரத்துக்கு வித்யாஸமாகவும் பண்ண வேண்டாம், நல்ல பக்தி மனஸுக்காரர்களின் தாபத்தை சமனம் செய்யாமலும் இருக்க வேண்டாம் என்று அந்தக் குழந்தையை விட்டுப் பாத பூஜை பண்ணச் சொன்னது.”

அபிஷேக தீர்த்தத்திற்குப் பதில் இளநீர் (எம்.எஸ்.-சதாசிவம்) கொடுத்த அதே ‘ஸாமர்த்தியம்’ தானே இங்கேயும் பேசுகிறது?

மூளையின் ஸாமர்த்தியத்துடன் இதயத்தின் ஒட்டுதலையும்ஒட்டிய இந்த ‘யுனீக்’ ஸாமர்த்தியத்தை என் சொல்ல?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories