
ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை மார்கழி அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உளள நிலையில் ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.
கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நாளை அதிகாலை 4 மணி முதல் கும்ப ஜெபம், கணபதி ஹோமம், ஆஞ்சநேய ஹோமம் ,16 வகை அபிஷேகங்கள் தீப ஆராதனைகள் விநாயகர் மற்றும் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு நடைபெறும்.
அஷ்ட வரத ஆஞ்சநேயர் பின்னர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கவசத்தில் காலை முதல் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
மாலை 3மணிக்கு கும்பஜெயம் 108திரவிய ஹோமம் நடத்தி சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.
மேலும் இந்த கோவிலுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அன்னதானம் நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிகழ்ச்சிக் காண ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
மேலும் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அசையாமணி விலக்கு பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 10 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலைக்கு வெற்றிலை துளசி, மாலை அணிவித்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வை யொட்டி நடைபெறும்.
மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் ராம பக்த ஆஞ்சநேயருக்கு ராஜ தீபாராதனை வழிபாடு நடைபெறும்.
நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்வார்கள்.
மேலும் நாளை இந்த கோவிலில் ஐந்து அலங்காரங்களில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பம்சமாகும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்து சுவாமிகள் செய்து வருகிறார்.
இதுபோல் ராஜபாளையம் கோதண்டராமசாமி கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அஸ்டாபிஷேகம் சிறப்பு அலங்காரம் வடமாலை சாற்றி தீபாராதனை வழிபாடு விமர்சையாக நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்க கோவில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ராஜபாளையம் சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெறும் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள சாய்பாபா கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை வழிபாடுகள் விமர்சனையாக நடைபெறும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.





