பரமன் அளித்த பகவத் கீதை(14): கதைசொல்லிகள்

Published:

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 14 : மகாபாரதக் கதைகதைசொல்லிகள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார். ஆனால் மகாபாரதக்கதை கதை சொல்லிகளால் வளர்ந்தது. இதனை முதன் முதலில் வைசம்பாயனர் ஜனமேஜயனுக்குச் சொன்னார். இந்த வைசம்பாயனர்  வியாசரின் சீடர் ஆவார். இவர் கதை சொன்ன ஜனமேஜயனோ பரீக்ஷித்தின் மகன். பரிக்ஷித் அபிமன்யுவின் மகன்; அர்ச்சுனனின் பேரன். இப்படி அனைவரும் மகாபாரதத்தோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள்.

          பரிக்ஷித் ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது தன் படையினரிடமிருந்து வெகுதொலைவு சென்றுவிட்டான். அங்கிருந்து திரும்பிச்செல்ல வழி தெரியவில்லை. அப்போது அங்கே தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரிடம் திரும்பிச் செல்ல வழி கேட்டான். அவர் தவத்தில் இருந்த்ததால் பதில் தரவில்லை. இதனால் கோபமுற்ற பரிக்ஷித் ஒரு செத்த பாம்பை அந்த முனிவரின் கழுத்தில் பொட்டுவிட்டுச் சென்றான்.

          சிறிதுநேரம் கழித்து அங்கே வந்த முனிவரின் மகன் ஞானதிருஷ்டியால் நடந்ததி அறிந்து, இன்றிலிருந்து ஏழாம் நாளில் பரிக்ஷித் தக்ஷகன் என்ற நாகத்தால் கடிபட்டு இறந்துபோவான் எனச் சாபமிட்டார். அச்சாபத்தின்படி பரிக்ஷித் இறந்தார்.

          அவரது மகனான ஜனமேஜயன் தக்ஷ்கனையும் நாகங்களையும் பழிவாங்க ஜனமேஜயன் சர்ப்ப யாகம் என்ற யாகத்தைத் தொடங்கினார். அப்போது அஸ்தீகர் என்ற முனிவர் யாகத்தைத் தடுத்து நிறுத்தினார். இதனை நினைவுபடுத்தும் ஸ்லோகம் ஒன்றினை நாம் சந்தியாவந்தனம் செய்யும்போது தினமும் மூன்று முறை சொல்லுகிறோம்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அப சர்ப்ப சர்ப்ப பத்ரந்தே தூரம் கச்ச மகாயசா:
ஜனமேஜயஷ்ய யஜ்ஞாஅந்தே அஸ்திக வசனம் ஸ்மரன் ||
ஜரத்காரோர் ஜரத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயச:
அஸ்தீக ஸ்த்யஸ்ந்தோ மாம் பன்னகேப்யோ அபிரக்ஷது

பாம்புகளும் மகாபாரதமும்

  1. மகாபாரதத்தின் தொடக்கத்தில் நஹுஷன் என்ற அரசர் ஒருவரின் கதை வருகிறது. இவர் தான் செய்த யாக பலன்களின் விளைவாக இந்திரன் ஆகிறார். ஆனால் இந்திராணியைப் பார்க்கச் செல்லும் அவசரத்தில், தன் பல்லாக்கைத் தூக்கிச் செல்லும் முனிவர்களை வேகமாகச் செல்லுங்கள் என்று கூற ‘சர்ப்ப, சர்ப்ப’ என விரட்டுகிறார். இதனால் கோபமடைந்த முனிவர் ஒருவர் அவரை சர்ப்பமாக சாபமிடுகிறார்.
  • அர்ச்சுனன் காண்டவ வனத்தை எரிக்கும்போது அதில் இருந்த தக்ஷகனுடைய குடும்பமும் இறந்துபோகிறது. அதில் தப்பிப் பிழைத்த தக்ஷகனின் மகன் அஸ்வசேனன் கர்ணனிடத்தில் நாகாஸ்திரமாக அடைக்கலம் புகுந்து அர்ச்சுனனைக் கொல்ல ஏவப்படுகின்றான்.
  • ஜனமேஜயனின் ஆலோசகர்கள் ராஜாவிடம் அவரது தந்தையின் மரணத்திற்கான சூழ்நிலைகளைப் பற்றிச் சொல்லவில்லை. உத்தங்கன் சொன்னான், அவன் ஜனமேஜயனின் அரசவைக்குச் சென்று, தன் தந்தையான பரீக்ஷித்தின் மரணத்திற்குக் காரணமான தக்ஷகனைப் பழிவாங்குவதற்குப் பதிலாக அற்பமான காரியங்களில் நேரத்தை வீணடித்ததற்காக ராஜாவைத் திட்டினான்.
ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

உத்தங்கர் யார், ஜனமேஜயனை ஏன் தூண்டினார்?

          உத்தங்கர் அயோத-தௌமிய முனிவரின் சீடர்களில் ஒருவர். அயோத-தௌமியரின் மற்றொரு சீடரான வேதர் ஒரு யாகத்தில் ஈடுபடுவதற்காக வெளியேற வேண்டியிருந்தபோது, ​​உத்தங்கர் தனது ஆசானின் வீட்டில் தங்கி சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் அவர் தனது ஆசானின் மனைவிக்கு பரிசாக தனது ராணியின் காதணிகளைப் பெறுவதற்காக மன்னர் பௌசியரிடம் சென்றார். அவற்றைப் பெற்ற பிறகு, உத்தங்கர் வீடு திரும்பியதும், அந்தக் காதணிகளை தக்ஷகன்  திருடிச் சென்றுவிட்டார். சுருக்கமாகச் சொன்னால், உத்தங்கர் இந்தக் காதணிகளை மீட்டு, தனது ஆசானின் மனைவிக்கு பரிசளித்தார், ஆனால் தக்ஷகரின் மீதான அவரது வெறுப்பு நீடித்தது. பழிவாங்குவதற்காக, உத்தங்கர் ஜனமேஜயனிடம் சென்றார்.

  • அஸ்தீகர் யார்?

          இந்த சர்ப்ப யாகத்தை நிறுத்திய அஸ்தீகர் யார்? அவரைப் பற்றி நாம் ருருவுக்கு அவரது தந்தை பிரமதி சொன்ன கதையின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஜனமேஜயனின் பாம்பு யாகத்தில் அஸ்திகர் என்ற பிராமணரால் பாம்புகள் காப்பாற்றப்பட்ட கதையை ருரு ஏன் பிரமதியிடம் கேட்டார்? ஏனெனில் சஹஸ்ரபாதன் என்ற பிராமணன் துந்துபாவாக (விஷமற்ற பாம்பாக) மாற சபிக்கப்பட்டான்.

          பிராமணரான சஹஸ்ரபாதன் ஏன் பாம்பாக மாறும்படி சபிக்கப்பட்டான் தெரியுமா? இளம் சஹஸ்ரபாதன் ஒரு காலத்தில் தனது பிராமண நண்பன் சுகாமாவை புல் கத்திகளால் ஆன பாம்பைக் கொண்டு பயமுறுத்தி ஒரு குறும்பு செய்தான். பயந்துபோன ககாமா சஹஸ்ரபாதனை பாம்பாக மாறவும், ருரு என்பவரால் மட்டுமே சாபத்திலிருந்து விடுவிக்கப்படவும் சபித்தான்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

          பின்னர் ருருவால் சாபவிமோசனம் பெற்ற சஹரஸ்ரபாதன் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாக எப்படி அஸ்தீகரால் நிறுத்தப்பட்டது என்ற கதையை ருருவிற்குச் சொன்னான்.

  • பீமன் சிறுவயதினனாக இருக்கும்போது துரியோதனனால் விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டு கங்கையில் தூக்கி எறியப்படுகிறான். அவனை நாகர்கள் தூக்கிச் சென்று காப்பாற்றுகிறார்கள். அவனுக்கு அமிர்தத்தைக் கொடுத்து அவன் மேலும் பலமுடையவனாக மாற்றுகிறார்கள்.
  • அர்ச்சுனன் தனது தீர்த்த யாத்திரையின் போது நாக லோகத்திற்குச் சென்று அங்கு உலூபி என்ற பெண்ணை மணக்கிறான். அவர்களுக்கு அரவான் என்ற மகன் பிறக்கிறான்.

          இவ்வாறு பாம்புகள் முடிவில்லா காவியமான மகாபாரதத்தில் பல இடங்களில் தொடர்புடையதாக இருக்கின்றன.

Related articles

Recent articles

spot_img