1001445760 - 2026

வாசுதேவநல்லூரில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா!

நெல்லை அரசியல் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
1001445760 - 2026

வாசுதேவநல்லூரில் நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பெண்கள் பொங்கல் இட்டனர்.

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் வாசுதேவநல்லூா் பழைய பேருந்து நிலையம் அருகே காலை 9 மணிக்கு ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ திருவிழா 1,008 பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது

1001445761 - 2026

இவ்விழாவுக்கு ஆனந்த் அய்யாசாமி தலைமை வகித்தார்.பாஜக மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ,ஏற்பாட்டில் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை பொங்கல் விழாவை தொடங்கிவைத்தார்.

இதில், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது இன்றைய தினம் இந்த தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தமிழக பாஜக தென்காசி மாவட்ட தலைவர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற “நம்ம ஊரு மோடி பொங்கல்” பெருவிழாவில், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் KC திருமாறன் அவர்கள், மரியாதைக்குரிய அய்யா ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள் அவர்கள், தமிழக பாஜக மாவட்ட நிர்வாகிகள், சகோதர சகோதரிகளுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

தென்காசி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான செண்பகவல்லி அணையை சீரமைப்பது உள்ளிட்ட தென்காசி மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது திமுக அரசு. அதே சமயம், புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகாரம் வழங்கியது மத்திய பாஜக அரசு.

தென்காசியில் கனிமவளங்களை கொள்ளையடித்து கேரளாவிற்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை என்று மனமுவந்து திமுக நிர்வாகியே தனது கட்சி பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நிர்வாக தோல்வி அடைந்திருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இந்நிலையை நாம் ஒன்றிணைந்து மாற்றி காட்டுவோம். அதற்கு வரவுள்ள தேர்தலில் தேசியவாத சிந்தனை கொண்ட தென்காசி மண்ணை சார்ந்த ஒருவரை நாம் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

சூரியனையும், பஞ்சபூதங்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் பொங்கல் பெருவிழாவில் எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு அனைத்து உயிர்களுக்கும் நலமும், வளமும் கிடைத்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.