SL Vs Ind 2nd Test: இலங்கை அணிக்கு நெருக்கடி!

Published:

ind vs sl tet - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி 2ம் நாள் ஆட்டம்
ஸ்கோர் – இந்தியா 252 & 303/9 டிக்ளேர்
இலங்கை 109 & 28/1

பெங்களூருவில் நடக்கும் இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மிகவும் ஒருதலைப்பட்சமாக இருந்தது. ஜஸ்பிரித் பும்ரா சொந்த மண்ணில் தனது முதல் ஐந்து விக்கட் சாதனையை நிகழ்த்தினார். ரிஷப் பந்த் ஒரு இந்தியரின் அதிவேக டெஸ்ட் அரைசத சாதனையை சாதாரணமாக முறியடித்தார். மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் தனது இரண்டாவது அரை சதத்தை அடித்து இலங்கையை மலையளவு பற்றாக்குறையின் கீழ் புதைத்தார்.

இலங்கை இன்று ஐந்தரை மணிநேரம் பந்துவீசியபோதும் சிறப்பாகப் பந்து வீசவில்லை. இந்திய அணியின் அபார பந்துவீச்சின் காரணமாக இலங்கை அணியின் ஐந்து விக்கெட்கள் வீழ்ந்தது. எஞ்சியிருந்த நான்கு இலங்கை முதல் இன்னிங்ஸ் விக்கெட்டுகளை இன்று காலை முதல் அரை மணி நேரத்தில் இந்திய அணி எடுத்தது. கடைசியாக, இரண்டாவது இன்னிங்ஸில் லஹிரு திரிமானேவை பும்ரா ஆட்டமிழக்கச் செய்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இன்று காலை உணவு இடைவேளை வரையாவது இந்தியாவை மைதானத்தில் நிறுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில் இலங்கை நாளைத் தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் ஆறு ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. இந்தத் தொடரில் அவர்கள் 167.5 ஓவர்களில் 31 விக்கெட்டுகளை இழந்துள்ளனர். அவர்களின் பந்துவீச்சாளர்கள் அந்த அணிக்கு ஒரு அரை வாய்ப்பு தரும் அளவிற்கு பந்து வீசியிருக்கலாம்.

ஆனால் இலங்கையின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நிலைமைகளை வீணடித்தனர். அவர்கள் தொடர்ந்து ஓவர்பிட்ச் செய்தார்கள் அல்லது பேட்டர்களை பின் பாதத்திலிருந்து ஆபத்து இல்லாத ஷாட்களை விளையாட அனுமதித்தனர். எனவே அவ்வப்போது விளையாட முடியாத பந்து வீச்சுகள் இருந்தபோதும், கருணாரத்னவால் அதிகமான கேட்ச் பிடிக்க ஃபீல்டர்களை நிறுத்த முடியவில்லை.

இந்தியாவின் பேட்டர்கள் நேர்மறையான அணுகுமுறையுடன் தங்கள் பங்கைச் செய்தனர். ரோஹித் ஷர்மாவின் ரிவர்ஸ் ஸ்வீப் இன்று கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த இன்னிங்ஸில் மூன்று ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடினார்; அவரது மீதமுள்ள சர்வதேச வாழ்க்கையில், அவர் ஏழு ரிவர்ஸ் ஸ்வீப் மட்டுமே விளையாடியுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இன்று தவறான பந்துகளுக்காக ரிஷப் பந்த் காத்திருக்கவில்லை. மற்றவர்கள் உங்களுக்குச் செய்வதற்கு முன் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள் என்ற கொள்கைப் படி தனஞ்சய டி சில்வாவின் பந்தை ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருக்கு அடித்தார். 7 பந்தில் 20 ரன்களை எட்டினார். இந்த சிக்ஸர்கள் அவரை இந்தியாவுக்காக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் 8வது இடத்திற்கு கொண்டு சென்றது.

ரிஷப்பின் இன்னிங்ஸில் வெறித்தனமான ஷாட்டுகள் எதுவும் இல்லை. அவர் எதிர்கொண்ட 28 பந்துகளில் 50 ரன் அடித்தார். இதற்கு முந்தைய இந்திய சாதனை கபில் தேவ், 30 பந்துகளில் 50 ரன் அடித்ததாகும். அநேகமாக நாளை உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தியாவின் வெர்றிச் செய்தி கிடைக்கலாம்.

Related articles

Recent articles

spot_img