இந்தியாநியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் – புனே – இரண்டாம்நாள் – 25.10.2024
நியூசிலாந்தின்சுழல்பந்து ஜாலம்
முனைவர்கு.வை. பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்துஅணி (முதல் இன்னிங்க்ஸ் 259, டெவன் கான்வே 76, ரச்சின் ரவீந்த்ரா 65, மிட்சல் சாண்ட்னர்33, வாஷிங்க்டன் சுந்தர் 7/59, அஷ்வின் 3/64, இரண்டாவது இன்னிங்க்ஸ் 198/5, டாம் லேதம்86, டாம் புளண்டல் 30, வாஷிங்க்டன் சுந்தர் 4/56, அஷ்வின் 1/64); இந்தியா அணி (முதல் இன்னிங்க்ஸ் 156, ஜெய்ஸ்வால் 30,கில் 30, ஜதேஜா 38, மிடஸ்ல்சாண்ட்னர் 7/53, கிளன் பிலிப்ஸ் 2/26, டிம்சௌதீ 1/4) நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஒரு விக்கட் இழப்பிற்கு 16 ரன் என்ற ரன்கணக்கில் இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி மிக மோசமாக விளையாடியது. பேட்டர்கள்வரிசையில் ஜெய்ஸ்வால் (30 ரன்) மற்றும் கில் (30 ரன்) இருவர் மட்டுமேசொல்லிக்கொள்ளும்படி ரன் அடித்தார்கள். இன்று ஆடிய விராட் கோலி (1 ரன்), ரிஷப்பந்த் (18 ரன்), சர்ஃபராஸ் கான் (11 ரன்) என சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழந்தனர்.பின் வரிசையில் ஜதேஜா (38 ரன்) வாஷிங்க்டன் சுந்தர் (ஆட்டமிழக்காமல்18 ரன்) இருவர் மட்டுமே சற்று நேரம் பிட்சில் நின்று ஆடினர். மற்ற வீரர்களான அஷ்வின்(4 ரன்), ஆகாஷ்தீப் (6 ரன்), பும்ரா (பூஜ்யம் ரன்) ஆகியோர் வந்தார்கள்போனார்கள் ரகம். தாங்கள் விரித்த வலையில் தாங்களே மாடிக்கொண்டது போல அனைவரும் சுழப்பந்துவீச்சிற்கே விழுந்தனர். 45.3 ஓவர்கள் மடுமே விலையாடி 3.42 ரன் ரேட்டுடன் 156 ரன்னுக்குஇந்ஹ்டிய அணி ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்க்ஸ் லீடாக 103 ரன் இருந்தநிலையில் நியூசிலாந்து அணியின் டாம் லேதம் (133 பந்துகளில் 86 ரன்) நிதானமாகஆடினார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய டேவன்கான்வே (17 ரன்), வில் யங் (23 ரன்), ரச்சின் ரவீந்த்ரா (9 ரன்)மிட்சல் (18 ரன்) ஆகியோர் அவசரமாக ஆடி விக்கட் இழந்தனர். இந்திய சுழல் பந்துவீச்சளர்கள் அஷ்வின் 1 விக்கட்டும் வாஷிங்க்டன் சுந்தர் 4 விக்கட்டும்எடுத்தனர். இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் அனுபவம் மிக்கவர்கள்; இவர்களேடு ஒப்பிடும்போதுநியூசிலாந்தி அனியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அனுபவம் குறைவு. சாண்ட்னர் மற்றும்கிளன் பிலிப்ஸ் இருவரும் இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கட்டுகள்எடுத்ததில்லை. இருப்பினும் அவர்கள் இருவரும் அற்புதமாக பந்துவீசினர்.
301 ரன் லீட் என்பது மிக அதிகம். இன்னமும்மூன்று நாள்கள் ஆட்டம் மீதி உள்ளது. நாளை மதிய உணவு இடைவேளைக்குள் நியூசிலாந்து500 ரன்கள் லீடுடன் இரண்டாவது இன்னிங்க்ஸைமுடித்துக்கொண்டால் இந்திய அணிக்கு சுமார் 225 ஓவர்கள் ஆடுவதற்கு கிடைக்கும் ஓவருக்கு3 ரன் எடுத்து ஐந்தாம் நாள் வரை ஆடினால் இந்திய அணி மகத்தான வெற்றிபெறும். இல்லையேல்நாளை மாலைக்குள் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதர்கு அதிக வாய்ப்புகள் உள்ளன்.
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்,ஓய்வு பெற்ற வானிலையாளர்,எண் 2, முதல் மாடி, கண்ணபிரான் கோயில் தெரு, பெரம்பூர், சென்னை 11
Dr.K.V.Balasubramanian,M. Sc.(Physics), M.A. (Tamil &History), M. Phil.,Ph. D.Meteorologist (retd.),
No. 2, I Floor, Kannabiran Koil Street, Perambur, Chennai-11Mobile: +919884715004