இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (44.1 ஓவரில் 180 ரன், நிதீஷ் குமார் ரெட்டி 42, கே.எல். ராகுல் 37, ஷுப்மன் கில் 31, அஷ்வின் 22, ரிஷப் பந்த் 21, மிட்சல் ஸ்டார்க் 6/48, பேட் கம்மின்ஸ், ஸ்காட்போலண்ட், தலா 2 விக்கட்); இரண்டாவது இன்னிங்க்ஸ் 36.5 ஓவர்களில் 175 (ஜெய்ஸ்வால் 24, ஷுப்மன் கில் 28, ரிஷப் பந்த் 28, நிதீஷ் குமார் ரெட்டி 42)
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ் (33 ஓவர்களில்ஒரு விக்கட் இழப்பிற்கு 337 ரன், நாதன் மெக்ஸ்வீனி 39, லபுசேன் 64, க்வாஜா 13, ட்ராவிஸ்ஹெட்140, பும்ரா 4/61, சிராஜ் 4/98, ரெட்டி 1/25, அஷ்வின் 1/53)
இரண்டாவது இன்னிங்க்ஸ் 3.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள்
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
இன்றைய இந்திய அணியில் அணித்தலைவராக ரோஹித்ஷர்மா செயல்பட்டார். அவர் தேவ்தத் படிக்கலுக்குப் பதிலாக அணியில் சேர்ந்தார்; அஷ்வின்வாஷிங்க்டன் சுந்தருக்குப் பதிலாகவும் ஷுப்மன் கில் துருவ் ஜுரலுக்குப்பதிலாகவும் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஹேசல் வுட்டிற்குப் பதிலாகஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டார். பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத்தீர்மானித்தது.
மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின்முதல் பந்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 19ஆவது ஓவர் வரை ராகுலும் கில்லும்ஆடினர்; 18.4ஆவது ஓவரில் ராகுல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில்ஸ்டார்க் தனது இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்தார். எட்டு பந்துகள் மட்டும் ஆடிய விராட்கோலி 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்த ஓவருக்கு அடுத்த ஓவரில் ஷுப்மன்கில் (31 ரன்) அவுட் ஆனார். அதற்கு அடுத்து ஆட வந்த ரோஹித் ஷர்மா (3 ரன்)23 பந்துகள் ஆடி அவுட் ஆனார். அச்சமயத்தில் ரிஷப் பந்தும் ஆட்டமிழக்க, அப்போதுமறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த நிதீஷ் குமார் ரெட்டியுடன் இணைந்து ஆட அஷ்வின்வந்தார். இருவரும் ஜோடி சேர்ந்து 32 ரன்கள் சேர்த்தனர். அஷ்வின் 22 ரன்; நிதீஷ் 11ரன். அஷ்வின் ஆட்டமிழந்த ஓவரில் ஹர்ஷித் ராணாவும் அவுட்டானார். அதன் பின்னர்நிதீஷ் சற்று அதிரடியாக ஆட, இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன் எடுத்தது.
அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல்இன்னிங்க்ஸ் ஆடவந்து 33 ஓவர் ஆடியது. ஒரு விக்கட் இழப்பிற்கு 86 ரன் எடுத்தது. இன்று,7 டிசம்பர் 2024 தனது முதல் இன்னிங்க்ஸைத் தொடர்ந்த அந்த அணி 87.3 ஓவர்கள் விளையாடி337 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. ட்ராவிஸ் ஹெட் 140 ரன்கள்எடுத்தார். பும்ரா மற்றும் சிராஜ் தலா நாலு விக்கட்டுகள் வீழ்த்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டஅஷ்வின் ஒரு விக்கட் மட்டும் எடுத்தார்.
தேநீர் இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி தனதுஇரண்டாவது இன்னிங்க்ஸை ஆட வந்தது. தொடக்க வீரர்களில் முதல் இன்னிங்க்ஸில் சிறப்பாகஆடிய ராகுல் நாலாவது ஓவரில் 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 9ஆவது ஓவரில்ஜெய்ஸ்வாலும் (24 ரன்) 15ஆவது ஓவரில் விராட் கோலியும் (1 ரன்) ஆட்டமிழந்தனர். அதற்கடுத்தஇரண்டாவது ஓவரில் கில் (28 ரன்) அவுட்டானார். ரோஹித் ஷர்மா 21ஆவது ஓவரில் 6 ரன்னுக்குஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் (28 ரன்), நிதீஷ் (15 ரன்) இருவரும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.இந்திய அணி இன்னமும் 29 ரன்கள் பிந்தங்கி உள்ளது.
ஆஸ்திரேலிய அணி நாளை இந்த டெஸ்டை வெல்வதற்குபெரிய வாய்ப்பு இருக்கிறது. அது நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் இந்திய அணி இன்னமும்குறைந்தபட்சம் 275 ரன் கள் சேர்க்க வேண்டும். அதற்கு இன்னமும் இந்திய அணியில் மூவர்சிறப்பாக ஆடவேண்டும். அடிலெய்டில் இந்திய அணி சென்ற முறை வென்றது; பகலிரவு ஆட்டத்தில் இந்திய அணி வென்றது என்றபழங்கதையெல்லாம் இருக்கிறது. ஆனால் 7000 ரன்னுக்கு மேல் அடித்த ரோஹித் ஷர்மா, 9000ரன்னுக்கு மேல் அடித்த விராட் கோலி ஆகியோரின் ஆட்டத்தைப் பார்க்கும்போது இந்திய அணிவெற்றி பெறுவதில் நியாயமே இல்லை என்று தான் தோன்றியது. அதன்படியே முடிவும் ஆனது.
முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்து, ரெங்க் பட்டியலில் 3 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டது.