ஆசிய யோகா சாம்பியன்ஷிப் தொடர் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்குகிறது. கேரளாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, சீனா, தென்கொரியா, வியட்நாம், சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, ஈரான், ஹாங்காங் ஆகிய 12 நாடுகளை சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். திருவனந்தபுரம் ஜிம்மி ஜார்ஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயன் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். 8 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு இடையே 7 பிரிவுகளில் 6 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. 30ம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது.
Popular Categories




