இன்று முதல் அமர்ந்து சாப்பிடும் முறை அமல்! ஓட்டல் உரிமையாளர் சங்கம்!

தமிழகம்
hotel food - 2026

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக அரசு பொதுமுடக்கத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பொது முடக்கம் தளர்வுகள் இல்லாமல் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதேபோல் சென்னையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் இரவு 7 மணி வரை ஹோட்டல் அறையில் அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டிற்கான தளர்வு அமலுக்கு வந்துள்ளது. 

தமிழக அரசு 1ம் தேதி முதல் சென்னையில் ஓட்டல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து 50 சதவிகித இருக்கைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என தளர்வு அறிவித்த நிலையில், ஓட்டல் உரிமையாளர் சங்கம் இன்று முதல் அமர்ந்து சாப்பிடும் முறையை அமல்படுத்தியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.