முகவர் கமிஷன் உயர்வு காரணமாக எல்.பி.ஜி. சிலிண்டர் விலை 2 ரூபாய் உயர்ந்துள்ளது தற்போது 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு 50 ரூபாய் 58 காசாகவும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்களுக்கு 25 ரூபாய் 29 காசாகவும் முகவர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டரின் விலை 495 ரூபாய் 39 காசுகளாக உள்ளது. கடந்த 1-ஆம் தேதி வரிவகை உயர்வு காரணமாக சிலிண்டர் விலை 2 ரூபாய் 94 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதத்தில் இது இரண்டாவது விலை உயர்வாகும்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari