விஜய் ரசிகர்களை சீண்டிய ரஜினியின் வசீகர வசனம்

சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்

rajini 2 0 - 2026

செல்பி புள்ள செல்பி புள்ள… இந்த வார்த்தையை கேட்கும்போது விஜய் பாட்டு தான் நினைவுக்கு வரும்

இந்த வார்த்தையை சொல்லியே ரஜினி கிண்டல் அடிப்பது போல் ஒரு காட்சியில் வசனத்தை பேசி இருக்கிறார் … வாங்கடா செல்ஃபி புள்ளைங்களா!  என்று ரஜினி ஒரு காட்சியில் அதிர்ந்து பேச … திரையரங்கு அதிர்கிறது

இந்த வார்த்தை விஜய்யை வம்புக்கு இழுக்கும் அல்லது கிண்டலடிக்கும் வசனம் தான் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சமீபகாலமாக முட்டல் மோதல் உரசல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அது இந்த படத்தில் இருப்பதாக ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர்

செல்போன் பற்றிய படத்தில் செல்ஃபி பற்றி பேசக் கூடாதா என்று ரஜினி ரசிகர்கள் பதில் கேள்வி கேட்டுள்ளனர்

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பிரம்மாண்டமான படம் 2.0 பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது . திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறது…

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு விமர்சனமும் கிடைத்துள்ளது பிரம்மாண்டமான காட்சிகள் கதையமைப்பு என எல்லாவற்றிலும் சிகரத்தை தொட்டு இருக்கிறார்கள் ரஜினியும் ஷங்கரும் ரகுமானும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.