வேலுார் மாவட்டம், சோளிங்கரில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இது 108 திவ்ய வைணவ தலங்களில், ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள கோசாலையில், 23 பசு மாடுகள் உள்ளன. இதுவரை கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த பசு மாடுகளுக்கு, தற்ப்போது கடும் வறட்சியால் தீவனங்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை.
இதனால், இங்குள்ள பசு மாடுகளை, பழநியில் உள்ள, ஒருங்கிணைந்த கோவில் கோசாலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோசாலையில் இருந்த 19 பசு மாடுகள் நேற்று லாரிகளில் ஏற்றி, பழநிக்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ள, நான்கு மாடுகள் மட்டும், அங்கேயே பராமரிக்கப்படுகின்றன.
பசு மாடுகள் மாமா வீட்டிலிருந்து மருமகன் வீட்டீற்கு மாற்றம் !
Popular Categories



