புது தில்லி :
இணைய சமநிலை (நெட் நியூட்ராலிட்டி) குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு இணையத்தைக் காப்போம் என்ற அமைப்பின் (savetheinternet.in) ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
டில்லி ஐஐடியில் மாணவர்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அண்மையில் கலந்துரையாடினார். அப்போது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாகவே பேஸ்புக் நிறுவனம் இயங்கி வருவதாக ஜூக்கர்பெர்க் கூறியிருந்தார்.
இதை அடுத்து, savetheinternet.in ஆர்வலர்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அனைவருக்கும் இலவச இணையதள சேவை வழங்குவதற்காக, பேஸ்புக் துவக்கியுள்ள இன்டர்நெட்.ஓஆர்ஜி (Internet.org)ல், பல்வேறு சேவைகளை பெற தொலைதொடர்பு நிறுவனங்கள் அனுமதி மறுக்கின்றன.
பேஸ்புக் பயனாளர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்காவில், பேஸ்புக் வழங்கிவரும் பல்வேறு சலுகைகளை போன்று, இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க நெட் நியூட்ராலிட்டி மற்றும் புதிய கண்டுபிடிப்பிற்கு விரைவில் அனுமதி உள்ளிட்டவைகளை இந்தியாவிலும் வழங்கவேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




