நிறம் மாறிவிட்டது! ருசி எப்படி இருக்குமோ!?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

vendaikkai coloued - 2026

குழந்தைகள் கூட விருப்பத்தோடு உண்ணும் வெண்டைக்காய் இப்போது நிறம் மாறி புதிய சிவப்பு வண்ணத்தில் கண்ணுக்கு விருந்து அளிக்கிறது.

நாம் அனைவரும் அறிந்தது பச்சை பசேலென்ற வெண்டைக்காய் களையே. வெண்டைக்காய் பொரியல் அனைவருக்கும் விருப்பமான ஒன்று.

வாரங்கல் அர்பன் மாவட்டம் ஹசன்பர்த்தி மண்டலம் பெம்பர்த்தியைச் சேர்ந்த பிரபாகர் ரெட்டி தன் வயலில் இந்த புதுவித வெண்டைக்காயை பயிரிட்டுள்ளார்.

இயற்கை விவசாய விதத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளதாக விவசாயி குறிப்பிடுகிறார். அறுவடை மிக அதிக அளவு இருப்பதாக விவரிக்கிறார்.

இதன் சத்துக்கள் பற்றி பார்த்தாலும் சிவப்பு வெண்டைக்காயில் சூட்சும போஷக சத்துக்கள் இருப்பதாக வாரங்கல் தோட்டத்துறை அதிகாரி சுத்தால சங்கர் தெரிவிக்கிறார்.

ரத்தக் குறைபாடு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சிவப்பு வெண்டைக்காய்களை உணவில் சேர்த்துக்கொண்டால் பயனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

புழுப் பூச்சிகளின் தொந்தரவு இருக்காது என்பதால் இந்த ரக வெண்டைக்காய்களை விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு விரும்புகிறார்கள். இந்த சிவப்பு வெண்டைப் பயிர் அதிகமாக பெங்களூரு, சிம்லா போன்ற குளிர் பிரதேசங்களில் பயிரிடப்படுவதாக தெரிவிக்கிறார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img