வைரமுத்துவுடன் ரஹ்மான் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்..!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சினிமா சென்னை தமிழகம் புகார் பெட்டி பொது தகவல்கள்
MANIRATHINAM 2 - 2026

‘பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவுடன் இணைவதா’..? கொதிக்கும் ரஹ்மான் ரசிகர்கள்

தமிழக திரைப்பட உலகில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநா் மணிரத்னம் இவர் தற்போது செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து,

‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தப் படத்துக்கான மொத்த 12 பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத போவதாக தெரிவித்துள்ளார்.

MANIRATHINAM 1 - 2026

மேலும், அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தான் தனித்துவத்துடன் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் .

இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவுடன் மணிரத்னமும், ஏ.ஆர். ரஹ்மானும் எப்படி வேலை செய்யலாம் என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி கடும் கண்டனத்தையும் தெரிவித்து வைரமுத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறுகின்றா்.

viramuthu - 2026

வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயியை ஒதுக்கி வைத்துவிட்டு வைரமுத்துவுக்கு மட்டும் வேலை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என பலர் கருத்து கூறியுள்ளனர்.

பாலியல் புகாரில் சிக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனை திரையுலகினர் ஒதுக்கி வைத்தது போன்று வைரமுத்துவையும் தமிழக திரை உலகமான கோடம்பாக்கம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

AR.RAKUMAN - 2026

பெண்கள் முன்னேற்றத்திற்கான சிங்கப் பெண்ணே பாடலில் வேலை செய்த ரஹ்மான் பாலியல் புகாரில் சிக்கியவருடன் கூட்டணி வைப்பது வியப்பாக உள்ளது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.