
விலங்குகள் ஆனாலும் சரி மனிதர்கள் ஆனாலும் சரி குழந்தை தன்மை ஒன்றாகத் தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் குட்டி யானை ஒன்று சிறுவர்களைப் போல் சறுக்கி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுனந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் செய்யும் குறும்புத் தன வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவ்வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள யானை வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Game of sliding is inbuilt in children’s genes? pic.twitter.com/JGPBQLNDO2
— Susanta Nanda IFS (@susantananda3) June 25, 2020