பொதுவாக மனித மனம் ஆசைகளால் கட்டமைக்கப்பட்டது. ஆசை பேராசையா என இரண்டு இருக்கிறது. தன்முனைப்பு தொடர்பான அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லோருமே ஆசைப்படாதே, பேராசைப்படு என்றுதான் போதிக்கிறார்கள். ஆசைப்படுவது என்று முடிவெடுத்து விட்டால் அது என்ன சின்ன ஆசை, பெரிசா ஆசைப்படு என்பது அவர்கள் வாதம். அந்த வகையில் கோடீஸ்வரனாவது என்பது லட்சியமாக இருந்தால் லட்சிசாதிபதியாவது நிச்சயம் என்பார்கள்.
ஆனால் இயல்பாகவே மாதம் ஒன்றுக்கு பல லட்சங்களில், கோடீகளில் வருமானம் ஈட்டும் பணக்காரர்களுக்கு எப்போதுமே ஒரு பலவீனம் இருக்கும். அதுதான் சில கிடைத்தற்கரிய பொருட்களை, வேர்களை, செடிகளை, காய்களை, கனிகளை, வீட்டில் வைத்திருந்தால் செல்வம் சேரும், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். பெரிய பெரிய பதவிகள் தேடிவரும். மந்திரிகள் தொடர்பு வரும் என்று நம்பிக்கை ஊட்டப்பட்டால், அல்லது அதைப் பற்றி கேள்விப் பட்டால், அதற்காக எவ்வளவு பெரிய தொகையையும் செலவழிக்க தயாராக இருப்பார்கள். அவர்களை பொருத்தவரை முதலிடத்திலேயே எப்போதும் இருக்க வேண்டும் என்ற ஆசை. இதுபோன்ற நபர்களை குறிவைத்துதான் சதுரங்க வேட்டைகள் நடத்தப்படுகின்றன.
நாகரெத்தினம் உண்மையா?
Popular Categories



