ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பார்கள். மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி படைத்தவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்குமாம். ஒருவரை ஒருவர் ஆலோசித்தே முடிவெடுப்பார்களாம். ஆண்களாக இருந்தால் பெண்டாட்டி தாசன் என்கிறார்கள். அப்படியானால் பெண்ணாக இருந்தால்? பதிபக்தி நிறைந்தவர்கள் என்று சொல்லாமா? சொல்லலாம். கணவனே கண்கண்ட தெய்வம் என நினைப்பவர்கள். இது பொதுவான கருத்துதான். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அன்பை செலுத்துவார்கள்.
Popular Categories



