மேஷராசியில் பிறந்த நண்பர்களே வணக்கம். நீங்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள், உறுதியான செயல்பாடு கொண்டவர்கள். அன்பை விரும்புகிறவர்கள். அதை விட அதிகமாக புகழை விரும்புகிறவர்கள் என்பது தெரிந்த விஷயம். இதோ தமிழ் புத்தாண்டு வருகிறது. இந்த புத்தாண்டு தரும் நற்செய்தி என்ன? என்பதை ஒரு ரவுண்ட் பார்ப்போமா?
இறுக்கம், புழுக்கம் தனிந்த மாதிரி இருக்கிறது. ஆனால் இன்னும் முற்றிலும் நீங்கிவிடவில்லை. காசுபணம் வருகிறது மறுக்கவில்லை. ஆனாலும் முழு தேவைகளையும் பூர்த்தி செய்து விடுகிற அளவிற்கு இன்னும் மேம்பாடு அடையவில்லை. அது எப்போது என்று காத்திருக்கிறீர்கள். தொழிலிலும், உத்தியோகத்திலும் நல்லதொரு மாறங்கள் வரவேண்டும் என்ற உங்கள் பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்த்திருக்கிறார் என்பது புரிகிறது. அந்த மாற்றத்திற்கான மாதம் தேதி நேரம் எது? விளம்பி வருஷம், இன்ன மாதம், இன்னதேதி, இன்ன கிழமை, இத்தனை மணிக்கு சுபமுகூர்த்த நேரம் மாதிரி தெரியுமா என்ற கேள்வி எழுகிறது. வாருங்கள் விடை தேடுவோம்.
மேஷ ராசி 2018 தமிழ் வருட பிறப்பு பலன்கள்|விளம்பி
Popular Categories



