அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களில் பத்தொன்பதாவது நட்சத்திரம் மூலம். இது ஒரு பெண் நட்சத்திரம். காலபுருஷன் ராசி அடிப்படையில் முதல் ராசியாக மேஷத்தில் அசுனியும். அடுத்த திரிகோணமான சிம்மத்தில் மகமும், அதற்கு அடுத்த திரிகோணமான தனுசுவில் மூலமும் அமையப் பெற்றிருக்கிற கேதுவின் இறுதி நட்சத்திரம்.
பண்பு, பணிவு, இரக்கம், கருணை நிறைந்தவர்கள். வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல் இருப்பதில்லை. லட்சியங்கள் நிறைந்தவர்கள். லட்சங்களை அல்ல கோடிகளை தேடும் ஆவல் உள்ளவர்கள். அதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறர்கள். வருடம் ஒருமுறை வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். கர்வம் நிறைந்தவர்கள். அன்பானவர்களுக்கும், தன்னை போற்றி புகழ்கிறவர்களுக்கும் எதை வேண்டுமானாலும் செய்து தருவார்கள். தன்னை விமர்சனம் செய்பவர்களையும், விரோதிகளையும் திட்டம் போட்டு பழித்தீர்த்து விடுவார்கள்.
தனுசு ராசி மூலம் நட்சத்திர பலன்கள்
Popular Categories



