Homeவீடியோதீபாவளி: திருப்பரங்குன்றம் உள்பட கோயில்களில் பக்தர்கள் கூட்டம்!

தீபாவளி: திருப்பரங்குன்றம் உள்பட கோயில்களில் பக்தர்கள் கூட்டம்!

-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை, உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் அதிகளவு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு மாதமும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்., இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஐந்து முப்பது மணிக்கு எல்லாம் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சார சாரையாக வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். தீபாவளி நாளான இன்று பக்தர்களுக்கு கூட்டம் அலை மோதுவதால் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ளது.

தீபாவளி கோயில்களில் பக்தர்கள் வழிபாடு:

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில், உள்ள கோவில்களில் காலை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தீபாவளி முன்னிட்டு, அதிகாலை பக்தர்கள் புது ஆடைகளை அணிந்து கொண்டு கோயில்களில் சுவாமி வழிபட்டனர். பின்னர், வீடுகளுக்கு சென்று நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினர்.

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், திருமங்கலம் மீனாட்சி சுந்தரே திருக்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன், அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மேலமடை சௌபாக்ய விநாயகர், தாசில்தார் சித்தி விநாயகர் ஆலயம், சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயம், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் ஆலயம், கள்ளழகர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.