சர்கார் செய்திகள்: கும்பகோணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உருவபொம்மை எரிப்பு!

சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வீடியோ

கும்பகோணத்தில் சர்க்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் வெளியாகியுள்ளதாக சர்க்கார் படத்தை தடை செய்யக் கோரி கும்பகோணத்தில் முன்னாள் கவுன்சிலர் முத்துராஜா தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கும்பகோணத்தில் சர்க்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கம் அமைந்துள்ள  காந்தி பூங்கா சந்திப்பு அருகில், முருகதாசின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி சர்கார் படத்துக்கு எதிராக கோஷங்களை முழங்கினர்

திரைப்படத்தை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., தவமணியும் பங்கேற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.