ஸ்டெர்லைட் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும்: எடப்பாடி

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம் வீடியோ
edappadi pazanisami int.mp4 - 2026

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்தத் தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்த போது

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது, ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டு இருந்தது அதை எதிர்த்து ஆலை உரிமையாளர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று கூறினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.