மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முதலாம் கொதிகலன் சூடேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வருடம் முழுவதும் எரியக் கூடிய நான்கு கொதிகலன்கள் உள்ளன. இவைகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பற்ற வைக்கப்படும்.
அதன் ஒரு பகுதியாக 2018-19 ஆணடிற்கான முதலாம் கொதிகலன் இளஞ்சூடு ஏற்று விழா நடைபெற்றது. இக்கொதிகலன் இந்த வருடம் முழுவதும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் ஆலையின் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாக இயக்குநர் பொன்னம்மாள் மற்றும் விவசாய குழு தலைவர் அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.



