பஹாமாஸ்,அபேகோஸ் தீவுகளை வாட்டிய டோரியன்!

thorian - 2026

வாஷிங்டன்: அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாஸில் டோரியன் புயல் கரையை கடந்தது.. தற்போது அமெரிக்கா நோக்கி அந்த புயல் செல்கிறது.

கரீபியன் தீவுகளுக்கு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயலுக்கு டோரியன் என பெயரிடப்பட்டது. இந்த புயல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவை திங்கள்கிழமை தாக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் அறிவுறுத்தியது.

dorian - 2026

இதையடுத்து பஹாமாஸை தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காற்றின் வேகம், மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை மக்கள் வைத்திருந்தனர்.

இந்த புயலானது நேற்று முன் தினம் வடக்கு பஹாமாஸ் அருகே அபாகோ தீவில் உள்ள எல்போகே பகுதியில் கரையை கடந்தது. பின்னர் நேற்று காலை பஹாமாஸ் தீவுகளை புயல் கடுமையாக தாக்கியது. புயலின்போது மணிக்கு 295கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

dorian 1 - 2026

புயலின் வேகத்தால் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. கடல் கொந்தளிப்பால் அலைகள் ஆர்ப்பரித்தன. கனமழையால் சாலையில் 3 அடிக்கு தண்ணீர் உயர்ந்திருந்தது. புயலுக்கு இதுவரை 5 பேர் பலியாகினர் என தெரிகிறது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

அது போல் பொருட்சேதமும் அதிகமாகவே இருந்தன. இந்த புயல் தற்போது கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அபாகோ தீவுகளில் 8வயது சிறுவன் வெள்ள நீரில் மூழ்கி பலியானான். மற்றொரு சிறுமி காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அதிபயங்கர டொரியன் புயல் அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதி நோக்கி புயல் நகர்ந்து செல்கிறது. முன் எச்சரிக்கையாக புளோரிடா உள்பட 3 மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

dorian 2 - 2026

டொரியன் புயல் பேரழிவை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைக்கும் என்று மியாமிலுள்ள தேசிய புயல் எச்சரிக்கை மைய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள் தேவையான உணவுகள், குடிநீர் போன்றவற்றை சில நாட்களுக்கு சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்எச்சரிக்கையாக புளோரிடாவுக்கு செல்ல இருந்த விமானங்கள், அங்கிருந்த வர இருந்த விமானங்கள் என 900க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

புயல் தாக்கியதால், பஹாமாஸ், அபேகோஸ் உள்ளிட்ட தீவுகள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. பஹாமாஸிலுள்ள 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. புயல் காரணமாக பல மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலைகளால், அபேகோஸ் தீவிலுள்ள கிணறுகளில் கடல்நீர் புகுந்துவிட்டது.

Dorian 3 - 2026

புயல் காரணமாக மற்ற தீவுகளில் ஏற்பட்ட சேத விவரங்கள் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. எனினும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 2.52 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.81 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரணப் பொருள்களைக் கொண்ட 30 வாகனங்களும் பஹாமாஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் டோரியன் புயல் மிகக் கொடூரமாக உள்ளது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதி மிகவும் பாதிக்கப்படும் என கூறியுள்ளார். முன்னதாக கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரு புயல் தாக்கியது. அப்போது 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது,

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories