ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி! பணம் எடுக்க போனவன் பிணமானான்!

உலகம் கிரைம் நியூஸ்
atm - 2026

ரஷ்யாவில் ஷெரபோவெட்ஸ் என்ற நகரில் செபர் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க இரு திருடர்கள் சென்றுள்ளனர்.

அங்கு ஒரு திருடன் மட்டும் வெளியில் நிற்க மற்றொருவன் உள்ளே சென்று ஏடிஎம் மிஷினை உடைக்க தீவிரமாக முயற்சி செய்துள்ளான்

அங்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் ஏடிஎம் மிஷினை உடைக்க முடியாத காரணத்தால் அந்த திருடன் தான் கொண்டுவந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்க்க முயற்சி செய்துள்ளான்

atm 1 - 2026

ஆனால் எதிர்பாராத விதமாக வெடிகுண்டு திருடன் மீது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் ஏடிஎம் மையம் சுக்குநூறாகி போனது. அது மட்டுமின்றி திருடச் சென்ற திருடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். வெடிகுண்டு சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறி ஓடிய நிலையில் வெளியே நின்ற மற்றொரு திருடனும் என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் காவல்துறையினர் இரு திருடர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.