லேட்டஸ்ட் மாடர்ன்: மைதானத்தில் மையல்! வைரல்!

Published:

Hasani Dodson1 - 2026

விளையாட்டு போட்டிகள் நடக்கும் மைதானங்களில் பரபரப்பாக நடக்கும் போட்டிக்கு இடையே ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தும் சில நிகழ்வுகளும் நடந்துவருகிறது.

இந்தியா- ஆஸ்திரோலியா கிரிக்கெட் போட்டியின் நடுவே இந்திய இளைஞரும்- ஆஸ்திரேலிய இளம்பெண்ணும் காதலை பரிமாறி திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது கால்பந்து வீரர் ஒருவர் இளம்பெண்ணுக்கு காதலை ஃபுரப்போஸ் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Hasani Dodson2 - 2026

அமெரிக்க கால்பந்து வீரர் ஹசானி டோட்சன் ஸ்டீபன்சன் மைதானத்தில் தனது காதலை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் வியக்கச்செய்துள்ளது.

ஸ்டீபன்சன் அமெரிக்காவில் உள்ள மினசோட்டா கால்பந்து கிளப்பில் உறுப்பினராக உள்ளார்

மினசோட்டா எஃப்சி மற்றும் சான் ஜோஸ் அணிக்கு இடையிலான போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது.

ஆட்டம் டிராவில் முடிந்தவுடன், ஸ்டீபன்சன் மைதானத்தில் அவர் தனது காதலி பெட்ரா வுகோவிச்சை அழைத்தார். அங்கு அவர் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தி உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரா, சந்தோஷ வெள்ளத்தில் துள்ளிகுதித்தார்.
அப்போது, இரு அணிகளின் வீரர்களும், ரசிகர்களும் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் பெரியளவில் வைரலாகி வருகிறது. பின்னர் இருவரும் கட்டி அனைத்து முத்தம் அளித்துக்கொண்டனர்.

Hasani Dodson - 2026

இது குறித்து பெட்ரா வுகோவிக் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், என்னால் என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை.

எங்கள் அழகான உறவை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img