
-K. V. பாலசுப்பிரமணியன் –
இந்தியா இன்று முதல் முறையாக ஆடவர் தாமஸ்கோப்பையை வென்றது. இந்தக் கோப்பையை இந்தியா வெல்வது 73 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்தியா தனது முதல் தாமஸ் கோப்பை பட்டத்தை வென்றது. கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற நேர் செட்டுகளில் ஜொனாடன் கிறிஸ்டியை தோற்கடித்ததார்.
இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் பட்டத்தை வென்றது. முன்னதாக, சாத்விக்சாய்ராஜ் ரன்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 23-21, 21-19 என்ற கணக்கில் முகமது அஹ்சன் மற்றும் கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவை வீழ்த்தியதுதால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. முதல் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் அந்தோனி ஜின்டிங்கை வீழ்த்தி லக்ஷ்யா சென் இந்தியாவை 1-0 என முன்னிலைப் படுத்தினார்.
முதல் செட்டை 8-21 என இழந்த பிறகு, இரண்டாவது செட்டில் சென் குறிப்பிடத்தக்க மறுபிரவேசம் செய்தார், அதற்குப்பின் மூன்றாவது செட்டில் நான்கு புள்ளிகள் பற்றாக்குறையை மாற்றி வெற்றி பெற்றார்.
ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சென் 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜின்டிங்கை தோற்கடித்தார். ஜின்டிங் முதல் கேமை 21-8 என கைப்பற்றினார்.