December 13, 2025, 4:03 PM
28.1 C
Chennai

2022-திருமதி உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவை சேர்ந்த சர்கம் கவுசல்..

500x300 1808753 sargam koushal - 2025

2022-ம் ஆண்டிற்கான திருமதி உலக அழகி பட்டம் இந்தியாவை சேர்ந்த சர்கம் கவுசலுக்கு கிடைத்து உள்ளது. திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. முதலில், இந்த போட்டியானது திருமதி உலகின் அழகிய பெண் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின்னர் திருமதி உலக அழகி என 1988-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. பெருமளவில் அமெரிக்காவே அதிக வெற்றிகளை தட்டி சென்றுள்ளது. 2001-ம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் என்பவர் முடி சூடினார். அவர் தற்போது 2022-2023-ம் ஆண்டுக்கான திருமதி இந்திய அழகிக்கான நடுவராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இன்று நடந்த திருமதி உலக அழகி போட்டியின் இறுதி சுற்று வரை இந்தியா முன்னேறி இருந்தது.

இதனால், முடிவு அறிவிக்கும் வரை பரபரப்பு காணப்பட்டது. இறுதியில் இந்தியாவை சேர்ந்த சர்கம் கவுசல், திருமதி உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்த சர்கம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் ஆசிரியையாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள திருமதி இந்தியா மேலாண் அமைப்பு, நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின்பு கிரீடம் திரும்ப கிடைத்து உள்ளது என தெரிவித்து உள்ளது. இதேபோன்று, புதிதாக கிரீடம் சூடிய சர்கம் வெளியிட்ட செய்தியில், 21 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீடம் நமக்கு கிடைத்து உள்ளது. அதிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன். இந்தியாவை மற்றும் உலகை நேசிக்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories