இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – மூன்றாம் நாள் – பெர்த்-24.11.2024– விராட் கோலி சதமடித்தார்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி முதல்இன்னிங்க்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன் (நிதீஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26, ஹேசல்வுட் 4/29, மிட்சல் ஸ்டார்க் 2/14, பேட் கம்மின்ஸ் 2/67, மிட்சல் மார்ஷ்2/12); இரண்டாவது இன்னிங்க்சில் 134.3 ஓவர்களில் 487/6 டிக்ளேர்ட்; ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்க்ஸில் 51.2 ஓவர்களில் 104 (அலெக்ஸ் கேரி 21, மிட்சல் ஸ்டார்க் 26, ட்ராவிஸ்ஹெட் 11, நாதன் மெக்ஸ்வீனி 10, பும்ரா 5/30, சிராஜ் 2/20, ஹர்ஷித் ராணா 3/48); இரண்டாவதுஇன்னிங்க்ஸில் 4.2 ஓவர்களில் 12/3 (பும்ரா 2/1, சிராஜ் 1/7). இந்திய அணி 522 ரன்கள்முன்னிலையில் உள்ளது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியஅணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 57 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 172 ரன் எடுத்திருந்தது.இன்று முதலாவதாக கே.எல். ராகுல் 62.6ஆவது ஓவரில் (176 பந்துகளில் 77 ரன், 5ஃபோர்) ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தேவதத் படிக்கல் 84.1ஆவது ஓவரில்(71 பந்துகளில் 25 ரன்) ஹேசல்வுட் பந்துவீச்சில் அவுட் ஆனார். மிக அருமையாக ஆடிவந்தஜெய்ஸ்வால் (297 பந்துகளில் 161 ரன், 15 ஃபோர், 3 சிக்சர்) 93.5ஆவது ஓவரில்ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜுரல்இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி (143 பந்துகளில் 100ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) ஜெய்ஸ்வால். வாஷிங்டன் சுந்தர் (94 பந்துகளில் 29ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ரன், 3 ஃபோர்,2 சிக்சர்) ஆகியொருடன் இணைந்து ஆடி தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
டெஸ்ட் அரங்கில் 491 நாட்களுக்குப்பின், கோலி இன்று 143 பந்துகளில்சதம் அடித்தார். 70 ரன்களில் இருந்து 100 ரன்களை எட்ட கோலி 20 பந்துகளையேஎடுத்துக்கொண்டார் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளைஅடித்து கோலி சதத்தை நிறைவுசெய்தார்.
சர்வதேச அரங்கில் கோலியின்30ஆவது டெஸ்ட் சதம், ஒட்டுமொத்தத்தில் 81ஆவது சதமாகும். சச்சின்,சுனில் கவாஸ்கர், டிராவிட்டுக்கு அடுத்தாற்போல் 30 சதங்களை கோலி எட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல்பெர்த் மைதானத்தில் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவதுசதத்தையும் பதிவு செய்தார். 2018ஆம் ஆண்டு இதேமைதானத்தில் கோலி கடைசியாக சதம்அடித்தநிலையில் தொடர்ந்து இந்த முறையும் சதம்விளாசியுள்ளார்.
கோலியின் சதத்திற்காகக் காத்திருந்த அணித்தலைவர்பும்ரா இரண்டாவது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தார். இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாஇரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது, முதல் ஓவரை வீசிய பும்ரா நான்காவது பந்திலேயேநேதன் மெக்ஸ்வீனை கால்காப்பில் வாங்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்ததாக லபுஷேன் 10 பந்துகளைக்கூடஎதிர்கொள்ளவில்லை, பும்ராவின் கத்திபோன்ற பந்தைவீச்சை எதிர்கொண்டு கால்காப்பில் வாங்கிவெளியேறினார். லபுஷேன் ஆட்டமிழந்த அந்தப் பந்தை எதிர்த்து நின்று பேட்டில் வாங்க முடியாதஅளவுக்குத் துல்லியமான பிரம்மாஸ்திரமாக பும்ரா பந்துவீச்சு இருந்தது. இந்தப் பந்தைஎவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் லபுஷேன் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
நைட்வாட்ச் மேனாக களமிறங்கிய கம்மின்ஸின்விக்கெட்டை சிராஜ் வீழ்த்தவே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது.ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகத்தை, நம்பிக்கையை, ஆவேசத்தை ஒற்றை மனிதராக பும்ரா தனதுபந்துவீச்சில் குறைத்துள்ளார். ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கட் இழப்பிற்கு4.2 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 12 ரன் எடுத்திருந்தது.
இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தைஎவ்வாறு ஆஸ்திரேலியா கொண்டு செல்லப் போகிறது என்பது விவாதத்துக்குரியது. ஆனால், இந்தியஅணிக்கு அதன் திட்டம் தெளிவாக இருக்கிறது, வெற்றி ஒன்று மட்டும்தான் இலக்கு என்று விளையாடிவருகிறது. இன்றைய நிலையில் நாளை உணவு இடைவேளைக்கு முன்னர் இந்திய அணி வெற்றியைப் பெற்றுவிடும்என்பதே என்னுடைய கணிப்பு.