December 7, 2025, 10:39 AM
26 C
Chennai

வெஸ்ட் இண்டீஸுடன் ஆஸ்திரேலியா பெற்ற த்ரில் வெற்றி!

WiVsAus - 2025

உலகக் கோப்பை 10-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கும் வெஸ்ட் இண்ட்டீஸ் அணிக்கும் இடையேயான போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 15 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது வெஸ்ட் இண்டீஸ்! இதை அடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியை தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியினர் பந்து வீச்சில் திணறடித்தனர்.

முதல் எட்டு ஓவரில் டேவிட் வார்னர், ஃபின்ச், உஸ்மான், மேக்ஸ்வெல் அனைவரும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். நான்காவதாக களமிறங்கிய ஸ்மித் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினார். அணியின் ஸ்கோர் 38 ஆக இருந்தது.

பின்னர் வந்த ஸ்டோனிஸ்ஸும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி இப்படி விக்கெட்களை இழப்பதை ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான், ஆச்சரியப் படுத்தும் விதமாக வேகப்பந்து வீச்சாளர் நாதன் கௌல்டர் 60 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அசத்தினார். உலகக் கோப்பையில் 8-வதாகக் களமிறங்கி அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் நாதன்.

ஸ்டீவ் ஸ்மித் 73 ரன் அடிக்க இறுதியில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தது.

289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குப் போட்டியாக விரைவிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

லீவிஸ் ஒரு ரன்னில் அவுட். கெயில் 21 ரன்னில் எல்.பி.டபிள்யூ, பூரன், ஹிட்மேயர் தலா 21 ரன்களில் அவுட், ஹோப் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க.. மிட்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.

ஸ்டீவ் ஸ்மித், ஃபின்ச், மேக்ஸ்வெல் அனைவரும் த்ரில் கேட்சுகளைப் பிடித்து அசத்த 45,46,47 என அடுத்தடுத்த மூன்று ஓவரில் 3 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் பறிகொடுத்தது!

50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து வெஸ்ட் இண்டீஸ் 273 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்திய நாதன் கௌல்டருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அளிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories