பள்ளி விழாவில் முதல் ராத்திரி குறித்து பேசிய திமுக எம்எல்ஏ; பின்னர் எம்எல்ஏவுக்கு நேர்ந்த கதி….?

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் புகார் பெட்டி

 

pukal mla - 2026

பள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ.

மதுராந்தகம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த இலவச மடிக்கணிணி வழங்கும் விழாவில், மாணவிகள் முன்னிலையிலேயே முதலிரவு சமாச்சாரம் குறித்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினா்.

இதனால் மாணவிகள், ஆசிரியா்கள், மற்றும் விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்  பொதுமக்களும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி முகம் சுழிக்கவும் வைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தமிழக அரசின் இலவச மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக எம்எல்ஏ புகழேந்தி கலந்து கொண்டு மாணிவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணிணியை வழங்கி வைத்து பேசினார்.

அப்போது, “மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற பின் அதற்கான சான்றிதழ் பெற்ற இடம் இந்த பள்ளிக்கூடம் தான்

.ஒரு பெண்ணை பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும் வாழ்வின் கடைசி காலத்திலும் அவர் நினைத்து நினைத்து பார்ப்பது முதலிரவு என்று சொல்வார்கள்.

என்னை பொறுத்தவரை ஆயிரம் நிகழ்வுகளில் நாம் சந்தித்தாலும் சட்டசபை உறுப்பினர் அங்கீகாரம் இப்பள்ளியில் இருந்து வழங்கப்பட்டது என்னால் மறக்க முடியாது” என்றார்.

எம்எல்ஏ இப்படி பேசியது பெண்கள் மேல்நிலை பள்ளியில்.. அதுவும் மாணவிகள், ஆசிரியர்கள் முன்னிலையிலேயே இப்படி பேசியதும் கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புகழேந்தியின் இந்த பேச்சுக்கு காஞ்சிபுரம் முன்னாள் எம்பி மரகதம் உடனே விழா மேடையில் வைத்தே எதிர்ப்பு தெரிவித்தார்.

”பள்ளி சம்பந்தமாக மட்டும் பேசுங்கள்” என்றார். இதனால் எம்எல்ஏவுக்கும் மரகதத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.