திராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்!

உரத்த சிந்தனை உலகம் சற்றுமுன் தமிழகம்
srilanka thiruvalluvar - 2026

இலங்கையில் இன்றளவும் திருவள்ளுவர் சிலைகள் எப்படி உள்ளன என்பதற்கான படங்களை தங்களது சமூகத் தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர் சிலர்.

தங்களை நாத்திகர்கள் என்று கூறிக் கொண்டு இந்து மத பழக்கங்களை மட்டும் இழிவுபடுத்தியும் பேசியும் வரும் திராவிட இயக்கங்களில் இருந்து வெளிவந்த கட்சிகள் ஆண்டு கொண்டிருக்கும் தமிழகத்தில், திருவள்ளுவருக்கு இருந்த நெற்றித் திருநீறை அழித்து, பூணூலை மறைக்க மேல் துண்டு அணிவித்து, ருத்திராட்ச மாலையை நீக்கி, நாத்திகத் திருவள்ளுவர் ஆக்கியிருந்தனர்.

ஆனால் அதற்கு மாற்றாக, திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவித்து அவரை மீண்டும் இந்து மத முனிவராக பாஜக.,வின் சமூக வலைத்தளப் பிரிவு மாற்றி படம் வரைந்து பதிவிட்டது.

இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் திருவள்ளுவரின் பாரம்பரிய இந்து மத சார்பு நிலையை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் திராவிட மற்றும் கிறிஸ்துவ மிஷனரி இயக்கங்களின் பிடியில் இருந்து தமிழறிஞர்களையும் தமிழையும் தமிழ்ப் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கையில் இன்னமும் திருவள்ளுவர் தமது பாரம்பரியத்தை இழக்காமல் நெற்றித் திருநீறு துலங்க சைவர் கோலத்தில் காட்சி தரும் படங்களை வெளியிட்டு வருகின்றனர் சமூகத் தளத்தில்!

இனி தமிழகத்தின் பாரம்பரிய வேர்களைத் தேட வேண்டும் என்றால், இலங்கையில் தான் தேட வேண்டும் போலும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.