ஆதார்- பான் இணைச்சிட்டிங்களா? கடைசி தேதி நெருங்குது சீக்கிரம்…

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
pan card - 2026

வருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதை தடுக்கபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

athar - 2026

வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடுவதோடு மட்டுமல்லாது, வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த சிக்கல்களில் இருந்து தப்பிக்க 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதே ஒரே வழி.

இணையதளம் மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

athar pan - 2026
  1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.
  2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
  4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.
  5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.
  6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

இதையடுத்து, உங்கள் பான் எண், ஆதார் எண்ணில் இணைந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.