காதலில் இணைந்த ரைஸா! காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்!

சினி நியூஸ் சினிமா
raisa - 2026

காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் பற்றிய அறிவிப்பை வெளியிடப்போவதாக நடிகை ரைஸா அறிவித்திருந்தார்.

ரைஸாவின் காதல் பற்றி அறியக் காத்திருப்பதாக, ஜி.வி.பிரகாஷ், ஓவியா, நிஷா என பலரும் வீடியோ வெளியிட்டுக் காத்திருந்தனர்.

இந்நிலையில், தனது காதல் குறித்த அறிவிப்பை, காதலர் தினத்தில் வெளியிட்டு பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார். ஆனாலும்,

அவர் வெளியிட்ட விஷயம் தன்னுடைய புதிய படம் பற்றியது என்பதால், படத்துக்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் # LOVE என்ற படத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டி, படம் பற்றிய தகவலை வெளியிட வேண்டும் என்பதற்காக, ரைசா வில்சன், ஒருவித பரபரப்பை கூட்டி விட்டார்.

ரைஸா வில்சன், மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வால்டர் பிலிப்ஸுடன், லவ் படத்தில் ஜோடியாக நடிக்கிறார். அட்லீயிடம் அசிஸ்டண்டாக பணியாற்றிய பாஸ்கோ பிரபு என்ற இயக்குநர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.