திருப்பதி கோயில் ஊழியர்கள் 91 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirumalathirupathi
tirumalathirupathi
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  • திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது

91 பேர் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்களுக்கு கொரோனா பாசிடிவ். ஈவோ அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

பிரமுக புண்ணியத்தலம் திருமலையில் கரோனா நோய் பரபரப்பும் சலசலப்பும் ஏற்படுத்தி வருகிறது.

திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஈவோ அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.

அலிபிரி அருகிலும் திருமலையிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி னோம் என்றும் பெரிய அளவில் யாத்திரிகர்களுக்கு கூட கரோனா பரிசோதனை நடத்தினோம் என்றும் கூறினார். பக்தர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

கொரோனா பரவும் பின்னணியில் தரிசனம் டிக்கெட் புக் செய்து கொண்டவர்களில் 30 சதவீதம் பேர் திருமலை யாத்திரையை ரத்து செய்து விட்டார்கள் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.