சென்னைக்கு ஒரு கோயம்பேடு; விஜயவாடாவுக்கு ஒரு பெஜவாடா! ‘கொரோனா கட்டற்ற சுதந்திரம்’

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
bhejawada-market
bhejawada-market

பெஜவாடா மார்க்கெட்டைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. கொரோனா பரவுகிறது… கவனமாக இருங்கள்… சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்… என்று கூறினால் யாருமே கேட்பதில்லை. யாரும் காதில் வாங்கிக் கொள்வதும் இல்லை. வெறும் பிரசாரத்திற்கு மட்டுமே இந்த வாக்கியங்கள் பயன்படுகின்றன.

விஜயவாடா மாவட்டத்தில் கொரோனா மீது பயம் இருக்கிறதா இல்லையா என்பது அவர்களின் செய்கைகளை பார்த்தாலே புரிந்து போகிறது.

மாஸ்க் அணிவதில்லை. கைகளை சோப்பால் கழுவுவதில்லை. சானிடைசர் உபயோகிப்பதில்லை.
ஆந்திரப் பிரதேசத்தில் கோவிட் பாசிடிவ் கேசுகள் பெருகுவதற்கு அருகில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்பேடு மார்க்கெட் தான் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது.

அங்கு ஆந்திர வியாபாரிகளும் விவசாயிகளும் சென்று கொரோனாவை தொற்றிக்கொண்டு வந்து ஏபியில் நூற்றுக்கணக்கானோருக்கு பரப்பி விட்டார்கள். பெரிய மார்க்கெட் கோயம்பேடுக்கு விவசாயிகள் நூற்றுக் கணக்கானவர்கள் சென்று வருவதால் அவர்கள் மூலம் ஏபியிலும் கேசுகள் அதிகரித்தன என்று பரபரப்பாக பேசப்பட்டது. இங்கு ஆந்திரத்திலும் அதே அலட்சியப் போக்கு காணப்படுகிறது. அதே கதை மீண்டும் இங்கும் நடக்கிறது.

விஜயவாடா நகரத்தில் காளேஸ்வர ராவு மார்க்கெட் கூட அதே போன்ற அச்சத்தையே ஊட்டுகிறது.

சாதாரண நாட்களில் இந்த மார்க்கெட் எவ்வளவு கூட்டமாக காணப்படும் என்று சொல்லவே தேவையில்லை. ஆனால் இந்த கொரோனா நேரத்திலும் கூட மக்கள் அதேபோல் கூட்டமாக சாமான்களை வாங்குவதற்கு வருகிறார்கள். கொஞ்சம் கூட கவனமாக முன்னெச்சரிக்கை எடுத்துக் கொள்வதாக காணப்படவில்லை. சமூக இடைவெளியை கொஞ்சமும் கடைபிடிப்பதில்லை.

குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் கேசுகள் மிக விரைவாக பெருகுவதற்கு இது ஒரு காரணம் என்று குற்றச்சாட்டு எழுகிறது.

கிருஷ்ணா மாவட்டத்தில் பதிவாகி உள்ள கேசுக்களில் மிக அதிகம் விஜயவாடாவிலேயே உள்ளது. காளேஸ்வர மார்க்கெட்டின் கூட்டத்தைப் பார்த்தால் பாதியும் அங்கேயே பரவும் வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள்.

இப்போதாவது மக்கள் வீடடங்கு, ஊரடங்கு கடைபிடிக்கா விட்டாலோ அதிகாரிகள் மார்க்கெட்டை கன்ட்ரோல் செய்யாவிட்டாலோ கோயம்பேடு மார்க்கெட்டை மீறி பெஜவாடா மார்க்கெட்டு கொரோனாவை பரப்புவதில் முன்நிற்கும் என்று கவலையும் வருத்தமும் எங்கும் காதில் விழுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.