varku rice Amla rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வரகரிசி நெல்லிக்காய் சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
varku rice Amla rice - 2026

வரகரிசி நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்

1/2 கப் வரகரிசி
3 பெரிய நெல்லிக்காய்
1 வர மிளகாய்
2 பச்சை மிளகாய்

தாளிக்க
கடுகு
உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை
பெருங்காயம்
மஞ்சள் தூள்
செக்கு நல்லெண்ணெய்
இந்துப்பு

செய்முறை

முதலில் வரகரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு களைந்து கொள்ளவும்.
பின் ஒரு பானையில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிவந்ததும் வராகரிசியினை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வேகவிடவும்.

வரகரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து நீரினை நன்கு வடித்து விடவும்
இப்பொழுது வரகு சாதம் தயார்.

இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை எடுத்து விட்டு பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து செக்கு நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.
சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கி நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சேர்த்து கிளற வேண்டும் (வரகு சாதம் குலையாமல் கிளறவேண்டும்). வரகு நெல்லிக்காய் சாதம் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.