dog 1 - 2026

வலியோனை வருடிவிட்டு தான் வாழ்க்கையா..? வைரலாகும் வீடியோ!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
dog 1 - 2026

ஒரு பூனையாலும், நாயாலும் இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமா என்று நாம் வியக்கும் அளவிற்கு தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பூனையும், நாயும் நடந்துகொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் லாஃப்ஸ் 4 ஆள் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

தற்போது இணையத்தில் வைராகி வரும் அந்த வீடியோவில், சோபா மீது வெள்ளை நிற நாய் ஒன்று படுத்து இருப்பதையும், அதனருகில் கருஞ்சாம்பல் மற்றும் வெண்மை நிறம் கலந்த ஒரு பூனை ஒன்று இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த நாய் தலையணையின் மீது தலை வைத்து உறங்கிக்கொண்டு இருக்கிறது, அதற்கு சுகமான உறக்கத்தை கொடுக்கும் பொருட்டு அதன் அருகில் அமர்ந்திருக்கும் பூனை மசாஜ் செய்வது போல அதன் உடலில் தனது முன்னங்கால்களை வைத்து மெதுவாக அழுத்தி விடுகிறது, இடையில் அந்த நாய் எழுந்துவிட்டு மீண்டும் சுகமாக உறங்க தொடங்குகிறது.

இதேபோன்று ஏற்கனவே ட்விட்டரில் பூனை ஒன்று நாய்க்கு தலையில் மசாஜ் செய்யும் வீடியோ வைரலாக நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த அற்புதமான வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்திருப்பதோடு, இந்த வீடியோ இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.