உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த காதலுக்கு தந்தை கமல் மற்றும் தாய் சரிகா ஆகியோர் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசனை சந்திக்க சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல் கார்சேல் சில நாட்கள் அவருடன் தங்கிவிட்டு நேற்று முன் தினம் மீண்டும் லண்டனுக்கு கிளம்பினார். காதலி ஸ்ருதிஹாசனை தற்காலிகமாக பிரிவது குறித்து மைக்கேல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, “ஒவ்வொரு முறையும் மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ருதிஹாசனும் தனது டுவிட்டரில், “ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் குட்பை சொல்லுவதற்கு கடினமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
