ஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்; நகைச்சுவை நடிகர் வடிவேலு கொந்தளிப்பு….!

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை தமிழகம்

vadivelu - 2026

என் கைவசம் பத்து படங்கள் இருக்கின்றன, ஆனால் என்னால் நடிக்க முடியிவில்லை என நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு திடீரென விலகியதால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை, இதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

வடிவேலு நடிக்க வர மறுக்கிறார் என ஷங்கர் புகார் அளிக்க வடிவேலுவுக்கு தகவல் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்கிறது தயாரிப்பாளர் சங்கம் ஆனால் அதையெல்லாம் துாக்கி ஓரம் போட்டு விட்டார் வடிவேலு.

இந்நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது.
படங்களில் ஆக்ஷ்னுக்கும், காமெடிக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது,

ஆனால் ஆக்ஷ்னையும், காமெடியையும் இணைத்துப் பார்த்து, அதன்படி என்னை இம்சை அரசன் 24ஆம் புலிகேசியில் நடிக்கச் சொன்னார்கள்

நான் மறுத்து விட்டேன் படத்தில் மூன்று கேரக்டர்களில் நான் நடிக்கிறேன் அப்படி இருக்கும் போது, என்னுடைய யோசனைகள் இல்லாமல், துளி கூட படத்தை அடுத்த கட்டத்திற்கு நகா்த்த வாய்ப்பே இல்லை.

sankar dr - 2026

படத்தில் கூட யாரையும் கொல்வதற்கு விட மாட்டேன் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் என்னுடைய மாமாவாக நடித்திருப்பார் நாசர் அவரை படத்துக்காக நான் கொல்ல வேண்டும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், அதை செய்ய நான் மறுத்துவிட்டேன்.

வேறு காட்சி படமாக்கப்பட்டது. இப்படி சினிமாவில் கூட யாருக்கும் துன்பம் இழைக்கக் கூடாது என நினைக்கும் நான் நிஜத்தில் யாரும் கெட்டுப் போக வேண்டும் என்று நினைப்பேனா.

24ஆம் புலிகேசி படம் தொடா்பாக வாங்க பேசலாம் என நடிகர் சங்கமும், தயாரிப்பாளா் சங்கமும் என்னை கூப்பிடுகிறது.

நான் ஏன் செல்ல வேண்டும்? என்னைப் பிரச்னை என்றாலும் தயாரிப்பாளரோ, இயக்குநரோ என்னிடம் நேரில் பேசித்தானே சரிசெய்ய முடியும்.

என் கையில் இப்போது பத்து படங்கள் உள்ளன. ஆனால் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை நடிக்க விடாமல் நெருக்கடி கொடுத்து என்னை முடக்கி உள்ளனா். இவ்வாறு வடிவேலு கொந்தளிக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.