புலன் விசாரணை செய்தால் கூட புலப்படாத இளையராஜா இசை- பார்த்திபன்….!

சினி நியூஸ் சினிமா தமிழகம்

03 June18 parthiban - 2026

புதிய பாதை எனும் திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிப்பட்ட நடிகர், இயக்குநர், பார்த்திபன் இளையராஜாவின் தீவிரமான ரசிகர். தான் அசிஸ்டெண்ட் இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றி இருந்தாலும், நான் முதன் முதலில் இயக்கிய புதிய பாதை படத்துக்கு சூழ்நிலைகள் காரணமாக இளையராஜா இசையமைக்க முடியாமல் போனது.

அதை ஈடுகட்டும் வகையில் எனது இயக்கத்தில் உருவான அடுத்தடுத்த படங்களில் இளையராஜாவின் இசையமைப்புதான் அதிகம் இருந்தது.

பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், உள்ளே வெளியே, தாலாட்டு பாடவா, இவன், பச்சகுதிர எல்லாமே இளையராஜாவின் இசையமைப்புதான்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இளையராஜாவின் பிறந்த நாளை ஒட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் இளையராஜாவின் இசையை அறிய முடியாது புலன் விசாரணை செய்தால் கூட புலப்படாது என கூறி ரசிக்க வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.