May 8, 2021, 10:12 am Saturday
More

  கன்னி (பங்குனி மாத பலன்கள்)

  panguni rasipalangal

  சார்வரி வருஷம் பங்குனி மாத ராசி பலன்கள்

  நாளது ஆங்கில வருடம் மார்ச் மாதம் 14ம் தேதி மாலை 06.03.42 மணிக்கு சூரியன் கும்பத்தில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சியாகிறார். 14.04.2021 இரவு 01.32.06 மணி வரை மீனத்தில் சஞ்சரிக்கிறார்.  அதுவரையிலான ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள்.

  கோச்சார கிரஹ நிலைகள்

  panguni rasi palankal
  2021-maasi-month-predictions

  பொதுக்குறிப்பு: இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வு குரு கும்பராசிக்கு பெயர்வது (கும்பராசி பலனை தருவார்) அதை ஒட்டியும் பலன் சொல்லப் பட்டு இருக்கிறது. மேலும் முக்கியமான தினம் அது அந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள் (சந்திராஷ்டமம் தவிர) இது பொதுப்பலன், அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலனை அறிந்து கொள்வது சிறந்தது

  kanni rasi - 1

  கன்னி ராசி : உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை-1, 2 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


  ராசிநாதன் புதன் 31.03.21 வரையிலும், மாதம் முழுவதும் சுக்ரன், கேது இருவரும் சனி பரவாயில்லை என்ற அளவிலும் பலன் தருகின்றனர். கிட்த்தட்ட நன்மைகள் அதிகம் இருக்கு.

  கிரஹவலிமை கொண்டு பார்க்கும்போது, புகழ் கீர்த்தி பரவும், நோய்கள் நீங்கிவிடும். பொருளாதார நிலை மேம்படும், உத்தியோகத்தில் பதவி சம்பள உயர்வு, வியாபாரம் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம், ஆடை ஆபரண சேர்க்கை, வழக்குகள் சாதக முடிவு, குடும்பத்தில் ஒற்றுமை கணவன் மனைவி நெருக்கம், சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகுதல், எதிர்பார்த்த திருமணம் கைகூடுதல், இல்லத்தில் சுப காரியங்கள் நடத்தல் சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைத்தல் கல்வியில் முன்னேற்றம், புதிய பூமி, வீடு கிடைத்தல், ஜீவன வகையில் ஆதாயம், பெரியோர்கள் ஆசிகள் தெய்வ அனுகூலம் என நன்மை அதிகம் இருக்கிறது.

  அதே நேரம் மற்ற கிரஹங்களால் ஜீரண கோளாறுகள், வாழ்க்கை துணைவரின் வைத்திய செலவு, எதிர்பாரா பயணங்கள் மூலம் அவஸ்தை, வாழ்க்கை துணைவரின் உறவுகள் மூலம் கலகம், நினைப்பதற்கு மாறாக நடத்தல், உடல் பலஹீனம், குடும்பத்தில் சச்சரவு, பணம் முடங்குதல், கடன் வாங்கும் நிலை, கர்பிணி பெண்களுக்கு பாதிப்பு, இப்படி இருந்து கொண்டிருக்கும்.

  தனிப்பட்ட ஜாதகத்தில் மற்ற கிரஹ வலிமையை கொண்டு இது கூடவோ குறைவாகவோ இருக்கும் ஆனால் நிச்சயம் இந்த பாதிப்புகள் இருக்கும்.

  முக்கிய நிகழ்வு/கவனம் : ஆகாரத்தில் கவனம், வாழ்க்கை துணைவர் உடல் நிலை, வைத்திய சிலவுகள், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இவற்றில் கவனம் தேவை ஜீவனவகையில் பிரச்சனை வரலாம்

  சந்திராஷ்டமம்: உத்திரம் 2,3,4 – 16.03.21 & 12.04.21,13.04.21, ஹஸ்தம் – 17.03.21, சித்திரை 1,2 – 18.03.21, 19.03.21

  வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

  செந்தில் ஆண்டவர், பால முருகன், கோயிலில் விளக்கேற்றுங்கள், ஏழைகளுக்கு அன்னதானம், இயலாதோருக்கு சரீர ஒத்தாசை, பறவைகள் விலங்குகளுக்கு உணவிடுதல் போன்றவை நன்மை தரும்.

  மாத ராசிபலன் கணிப்பு :
  லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, I Block, Alsa Green park, Near MIT Gate
  Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
  Email: [email protected]
  Phone: 044-22230808 / 8056207965
  Skype ID: Ravisarangan

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,163FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »