December 6, 2025, 8:58 AM
23.8 C
Chennai

சித்தாந்தச் சுமப்பாளர்… சீக்கிரமே கலந்துவிட்டார்!

venkatesh ramasamy - 2025

சங்கத்தின்(RSS) மீதான தடையை எதிர்த்து நடந்த சத்யாக்ரஹத்தில் கலந்து கொண்டு 1949ம் வருடம் சிறை சென்றவர்கள் காரைக்குடி ஹரிஹர ஷர்மா, மதுரையில் ஜனாஜி. இருவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனாஜியின் மிக நெருங்கிய நண்பர் வத்ராயிருப்பை பூர்விகமாகக் கொண்டு மதுரையில் வழக்கறிஞராக இருந்த ராமசாமிஜி. இவர் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார். சங்க பிரச்சாரக் ஆகவும் இருந்தார்.பின்னர் ஜனசங்கம், பாஜகவில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தார்.

ராமசாமிஜிக்கு வெங்கடேஷ் என்று ஒரு மகன். 1953ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே ஷாகா சென்றவர். நம் பாஜக மாநில பொருளாளர் S R சேகருக்கு பள்ளிக்கூட, கல்லூரி காலங்களில் மிக நெருக்கமான நண்பர். ABVPல் மாநில பொறுப்புவரை வகித்தார்.

மதுரைக்கு குருஜி கோல்வல்கர் வந்தபோது அவரை கவனித்துக் கொள்ள(பிரபந்தக்) சங்கத்தால் பணிக்கப்பட்டார். சங்கத்தில் உள்ள பலருடன் மிக நெருங்கிப் பழகியவர்.

மதுரையில் இருந்து 1994வாக்கில் வெங்கடேஷ்ஜி தொழில் நிமித்தமாக சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். 1999ல் ராமசாமிஜியின் மறைவுக்குப் பின் மாம்பலம் வாசியானார் வெங்கடேஷ். Share broking செய்தார்.

2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது நான் மத்திய சென்னை, வட சென்னையில் பொது கூட்டங்கள் பேச செல்லும் போது என்னுடன் வருவார். சற்று கிண்டலுடன் கூடிய என் பேச்சை கேட்டுவிட்டு அதில் உள்ள நிறை குறைகளை சொல்வார். 5,6 கூட்டங்களுக்கு பின் நான் அவரையும் பொது கூட்டத்தில் பேச சொன்னேன். சற்று தயங்கினார். 2,3 கூட்டத்திற்குப் பின் எந்த தயக்கமும் இல்லாமல் பேசினார். அந்த தேர்தலுக்குப் பின் சென்னை மாநகர பாஜகவில் குறிப்பிடத்தக்க பேச்சாளர் ஆனார்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் நவஜோத்சிங் சித்து, முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற தலைவர்கள் தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது அவர்களுடன் தமிழகம் முழுவதும் accompany செய்து சென்றதுடன், பொது கூட்டத்தில் அவர்களுளக்கு மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார்.

தென் சென்னை மாவட்ட பொருளாளர், துணை தலைவர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தார்.

மதுரை அரசியலை தன் நினைவு தெரிந்த நாளிலிருந்து அலசி ஆராய்ந்து அதில் ஈடுபாட்டுடன் இருந்தார். மேயர் முத்து, V K குருசாமி, ஸ்தாபன காங்கிரஸ் என்று பல அனுபவங்களை எங்களுடன் பல்வேறு காலக்கட்டங்களில் சுவைபட சொல்வார். தான் பெற்ற அனுபவம், நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று பழைய சம்பவத்துடன் ஒப்பிட்டு சொல்வார்.

ஆங்கில சினிமா பார்ப்பதில், ஆங்கில நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிவாஜியின் நடிப்பிற்கு ரசிகன். MGRன் ஆளுமைக்கு ரசிகன். எல்லா வயதினருடனும் பேசக் கூடியவர். சங்க சித்தாந்தத்தில் மிக உறுதியான நம்பிக்கை, பற்று கொண்டவர்.

யாரிடமாவது சற்று முன் கோபம் கொண்டாலும் பின்னர் அவர்களை அழைத்து பேசும் குணம் கொண்டவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை நண்பர் ஜெயகிருஷ்ணன் விடியற்காலை 3.3/4 மணிக்கு அழைத்து massive Heart attackல் வெங்கடேஷ்ஜி இறந்து விட்டதாக சொன்னான்.

என்ன கொடுமை இது. சித்தாந்தத்தை நெஞ்சில் சுமந்து வாழும் எவரையும் நல்லவிதமாக வாழ இறைவன் விட்டு வைப்பததில்லை என்பதுதான் என்னுடைய கடந்து வந்த அனுபவம். வெங்கடேஷ் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடிகளை சேர பிரார்த்திக்கிறேன்!

– ஓமாம்புலியூர் ஜெயராமன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories