
ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் தனுஷ் ராசி நேயர்களே. சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவம்சி ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து, தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன.

சஞ்சய் பாரதி இப்படத்தைப் பற்றி கூறியதாவது: நாங்கள் திட்டமிட்டபடியே, படக்குழுவின் அயராத உழைப்பினால் சூட்டிங்கை முடித்திருக்கிறோம். சூட்டிங் மிக விரைவாக நடந்ததற்கு முழு முதல் காரணம் தயாரிப்பாளர் தான். நாங்கள் இப்போது படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளோம்.
படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளையும் முன்னதாகவே துவக்கிவிட்டோம். இப்படத்தில் முற்றிலும் புதிய ஹரீஷ் கல்யாணை காணலாம்.

முரட்டுதனம் மிகுந்த மற்றும் காதல் பொங்கும் இளைஞனாக வந்த அவரது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, இப்படத்தில் முழுக்க காமெடியில் கலக்கியிருக்கிறார். குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளும் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள். என்றார்.



