இந்த பலகாரத்தை தீபாவளிக்கு முன்னாடியே சுடப் போறங்களாம்! ஏற்கனவே சுட்டது தானே!

Published:

pikilu - 2026

விஜயின் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபாவளி தினத்துக்கு இரு தினங்களுக்கு முன்பே வெளியிடப்படுகிறது.

இதற்கு காரணம் அந்த படத்தின் மீது கதைதிருட்டு வழக்கு போடப்பட்டுள்ளதால், கடைசி நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாத சிக்கல் ஏற்பட்டு ஒரு நாள் ரிலீஸ் தள்ளி போனாலும், பண்டிகை நாளுக்குள் வெளியாகிவிடும் என்ற பக்கா திட்டத்தில் தான் படக்குழு இப்படி ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதாம்.

சங்கருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பட்ஜெட் படம் என்ற அந்தஸ்த்தோடு அதிக பொருட்செலவில் டத்தை எடுத்துள்ளார் சங்கரின் சிஷ்யர் அட்லி.

பட்ஜெட்டை தாண்டி லாபத்தை சம்பாதிக்க பல தரப்பு விளம்பர யுக்திகளையும் படத்தயாரிப்பு தரப்பும் இயக்குநரும் செய்து வந்தாலும், அவர்கள் நினைத்த அளவிற்கு படத்திற்கான விளம்பரம் இன்னும் சேர வேண்டிய இடங்களுக்கு சென்று சேரவில்லையாம்.

pikil - 2026

படத்தின் ரிலீஸ் தேதியை பண்டிகை அன்று வெளியிடாமல், அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இதற்கு காரணம் கதைதிருட்டு என வழக்கு எழுந்துள்ள நிலையில், படத்தை திட்டமிட்டபடி தீபாவளி தினத்தன்று வெளியிட நினைத்து, அது முடியாது போனால், மொத்த வியாபாரமும் பாதிக்கும் என்பதால், முன்கூட்டியே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக நேர்ந்தால் கூட தீபாவளிக்குள் எப்படியாவது படம் ரிலீஸ் ஆகிவிடும் என்பதே அவர்களின் பக்கா ஐடியாவாம்.

pikil 5 - 2026

இது இப்படியிருக்க பழைய தமிழ் பட கதைகளையே ரீடச் செய்து புது கலர் கொடுத்து பிளாக்பஸ்டர் கொடுக்கும், அட்லியை வைத்து பாலிவுட்டில் தானும் நல்லா கல்லா கட்டலாம் என ஹாருக்கான் நடிகர் முடிவு செய்தே இவருக்கு பாலிவுட் வாய்ப்பை வழங்கியுள்ளாராம்.

உள்ளூரிலே ரசிகர்களை ஏமாற்ற முடிந்த இயக்குநரால், நம்மூர் மக்களை ஈஸியா ஏமாற்றலாம் என்பதே இந்த அதிரடி கூட்டணிக்கான அஸ்திவாரம் என்ற தகவலும் காற்றில் பரவி வருகிறது.

இதற்கு முன் வெளியான இந்த கூட்டணியின் படத்திற்கு தேசிய கட்சியின் விளம்பரம் பக்க பலமாக இருந்தது. இந்த முறை இன்னும் அதிக பட்ஜெட் என்பதால், இசை நிகழ்ச்சியில், நேரடியாக ஆளுங்கட்சியையே ஆட்டி விளம்பரம் தேடினார் விஜய்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

ஆனால், ஆரம்பத்தில் அவசரபட்டு வாய்விட்ட ஒரு சில அமைச்சர்களை தலைமையிடம் உடனடியாக கண்டித்து வாய்ப்பூட்டு போட்டுவிட்டதால், அதற்கு பின்னர், எதிர்பார்த்த அளவிற்கான நெகட்டிவ் பப்ளிசிட்டி படத்திற்கு கிடைக்காமல் போய்விட்டது. இதனால், படத்தின் வசூல் பாதிக்கும் சூழலும் உருவாகியுள்ளதாம்.

Related articles

Recent articles

spot_img