செலிபிரட்டி பெண்களே உஷார்! டிடி வாழ்க்கை சொல்லும் பாடம்!

சினி நியூஸ் சினிமா
dd 4 - 2026

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பெண் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பிரபல தொகுப்பாளினி பிரியதர்ஷினியின் சகோதரி. பிடி, டிடி என இவர்கள் அனைவராலும் அழைக்கப்பட்டனர். டிடியின் தம்பி ஒரு விமான ஓட்டியாக உள்ளார். தற்போது இவர் அண்ணாஆதர்ஷ் கல்லூரியிலேயே படித்து முடித்துவிட்டு அங்கேயே பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள்.

dd 2 1 - 2026

இவர் தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். திவ்யதர்ஷினி அவர்கள் சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளர்கள் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான தொகுப்பாளர் ஆவார். இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர்ந்துள்ளது.

ரசிகர்கள்தான் பிரபலமான நடிகர்கள் இடம் ஆட்டோகிராஃப் வாங்குவதும், செல்பி எடுப்பது போன்று செய்வார்கள். ஆனால், சினிமாவில் உள்ள ஒரு சில பிரபலங்கள் நம்ம டிடி இடம் ஆட்டோகிராப் வாங்கி, போட்டோ எடுத்து உள்ளார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனால் அனைவரையும் இழுத்தவர்.

dd 3 - 2026

மேலும் ,ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்ம திவ்யதர்ஷினி தான் இருப்பார் என்று பேசப்படும் அளவிற்கு அவ்வளவு நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளார். மேலும், ஒரு நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை போரடிக்காமல் கொண்டு செல்லும் மந்திரத்தை திவ்யதர்ஷினிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

dd 1 1 - 2026

திவ்யதர்ஷினி எப்பவுமே நகைச்சுவையான தன்னுடைய துள்ளலான பேசினால் அனைவரையும் தன் பக்கம் இழுத்தவர்.அந்த மாதிரி தாங்க தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனையும் ஈர்த்தார்.

dd 2 - 2026

இவர் சில வருடங்களுக்கு முன்னால் அதாவது 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

dd 5 - 2026

டிடியின் கணவருக்கு டிடி லேட் நைட் பார்டிக்கு சென்று விட்டு வருவதும் பிற ஆண் நண்பர்களுடன் இரவு பார்டிகளில் நடனம் ஆடுவதும் டிவி சினிமாக்களில் நடிப்பது போன்றவை பிடிக்காதிருந்தது இதை திருமணத்திற்கு பின் தவிர்க்க அவர் கூறிய நிலையிலும் டிடி தொடர்ந்து இப்படி நடந்து கொண்டது மனக்கசப்பிற்கு வித்திட்டது. மேலும் டிடியின் பெயர் சுசி லீக்சிலும் அடிபட்டது இவருக்கும் இவருடைய கணவருக்கும் இருந்த விரிசலை அதிகப்படுத்தி இருக்கலாம்

இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்யலாம் என விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்தார்கள் பின்னர் உறுதியாக விவாகரத்தும் வாங்கினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.