மூன்று நடிகைகளுடன் இலங்கை சென்ற காட்டேரி

சினி நியூஸ் சினிமா

vaibav - 2026‘யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கி வரும் அடுத்த படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் காட்டேரியாக வைபவ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதை அடுத்து நடிகர் வைபவுடன் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகிய மூவரும் நேற்று இலங்கை சென்றனர். இலங்கையில் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், இந்த படப்பிடிப்பு முடிந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்.என்.பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் விக்கி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள காமெடி கலந்த திகில், த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.