விஜய்யிடம் பாராட்டு பெற்ற கீர்த்திசுரேஷ்

விஜய்யிடம் பாராட்டு பெற்ற கீர்த்திசுரேஷ்

சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடித்திருந்த கீர்த்திசுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறாது. அவருடைய நடிப்பை பாராட்டாத திரையுலக பிரபலங்களே இல்லை என்று கூறலாம். எஸ்.எஸ்.ராஜமெளலி, ஏ.ஆர்.முருகதாஸ், சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கீர்த்திசுரேஷை பாராட்டியுள்ள நிலையில் தற்போது இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷை பாராட்டியுள்ளார்.

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 62;’ படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடலின் படப்பிடிப்பின்போது சாவித்திரி கேரக்டரில் தத்ரூபமாக நடித்த கீர்த்திசுரேஷை விஜய் மனமார பாராட்டியதாகவும், இதனால் கீர்த்திசுரேஷ் மகிழ்ச்சியின் எல்லையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சண்டக்கோழி 2, சாமி 2, ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.